பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

எஸ். எம். கமால்

லாந்து பாராளுமன்றத்தில் எடுத்துக்காட்டி எட்டு ஆண்டுகள் ஆங்கில ஆட்சியையும் பிரதிநிதிகளையும் சாடியபொழுதும் வரலாற்றின் படிப்பினை புரிந்து கொள்ளாமல் நாடு பிடித்து ஆளும் நசிவுக் கொள்கையில் அவர்கள் நிலைத்து நின்றனர்.

நீதியும் நேர்மையும் சேதுபதி மன்னரை சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என அவர்களை நினவூட்டி இருக்கலாம். ஆனால், அதே நேரத்தில் அவர்கள் நெஞ்சிலே மறவர் சீமையைப் பற்றிய பயமும் பீதியும் நிரந்தரமாக நிறை , திருக்க வேண்டும். சேதுபதி மன்னர் சிறையில் இருந்து வெளியே வந்தால் ஏற்படும் நிலைமையை அவர்களால் எங்ங்னம் கட்டுப்படுத்த முடியும்? திருச்சிக் கோட்டை சிறையில் இருக்கும் பொழுது அவரது பெயரைப் பயன்படுத்தி பதினாயிரக்கணககான மறவர்களை மயிலப்பன் மன்னருக்கு ஆதரவாக கிளர்ந்தெழுமாறு செய்தார். இப்பொழுது மன்னரே நேரில் வந்து மறவர்களது உதவி கோரினால், மறவர் சீமையில் உள்ள அவைவரும் அல்லவா பரங்கியருக்கு எதிராகப் புறப்படுவர். அத்துடன் நெல்லைச்சீமை பாளையக்காரர்களும் திருவாங்கூர் அரசர் வீரர்களும், மேல்நாட்டு கள்ளர்களும் இன்னும் சிவகங்கை சீமை, படமாத்துார் மறவர்களும் அல்லவா சேதுபதி மன்னாது உதவிக்கு ஓடி வருவார்கள். பிறந்த மண்ணின் மீதுள்ள பற்றும். அந்நிய எதிர்ப்பு உணர்வும், உள்ளத்தில் நிறைத்து அணி திரளும் மக்களை எந்த சக்தியினால் எதிர்க்க முடியும்?

இதனால் தான் சேதுபதி மன்னரை மக்களிடமிருந்து பிரித்து கொடுஞ்சிறையில் அடைத்து அவரது வாழ்நாள் முழுவதையும் பாதுகாப்புக் கைதியாகவே கழித்து முடிக்குமாறு செய்தனர். தீரர் திப்புசுல்தானுக்கும், வீரர் கான்சாகிப்புக்கும் அஞ்சாத கும்பெனியார் மறவர் சீமையின் சேதுபதி மன்னருக்கு அஞ்சி நடுங்கினர், என்பது வரலாறு காட்டும் உண்மையாகும். மன்னரது வாழ்வுடன் மக்களது தன் மான உணர்வும், விடுதலை வேகமும் மங்கி மறைந்துவிடும் என்பது அவர்கள் கொண்டிருந்த முடிவு. ஆனால் அடுத்தடுத்து நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அவர்களது கணிப்பைப் பொய்யாக்கின. 1799-ல் வெடித்த முதுகுளத்து கிளர்ச்சி பாஞ்சாலங்குறிச்சிப் போர், 1800-ல் மதுரை, திண்