பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

147

சியிைன் பிரதிநிதியாக (ஜமீன்தாரினி) 20-2-1803-ல் ஏற்படுதினர்.[1] அதன் பின்னரும் கூட முத்துராமலிங்க சேதுபதியை விடுதலை செய்யவில்லையே ஏன்?

திருச்சிக் கோட்டையில் கைதியாக இருந்த சேதுபதி மன்னர் தாம் செய்த குற்றம் என்ன என கும்பெனி கவர்னரை கோரினார். பல மடல்களை அனுப்பி வைத்தார். பதில் ஏதும் வேலை. பார் புகழும் மறவர் சீமையின் மன்னராக இருந்த தங்கள் முன்னோர்களைப் போன்று முறை தவறாத ஆட்சி செய்தது குற்றமா? அல்லது காடு திருத்தி கழனி சேர்த்து, கண்மாய் நிறைத்து, கோவிலும் மடமும் சமைத்து, பஞ்சமும் பசியும் நீக்கி, வளமை சேர்த்தது குற்றமா? தம்மீதான குற்ங்களை ஆராய்ந்து தீர்ப்பு வழங்க, விசாரணை ஏற்படுத்துமாறு அவர் கோரினாரே அந்த குற்றச்சாட்டுகள் விசாரனை செய்யப்பட்டனவா? அல்லது அந்த குற்றங்களுக்கு தண்டனை இல்லை என முடிவு செய்யப்பட்டதா? இல்லையே ஏன்? பரங்கியரின் பெரும் பிரதிநிதிகளான சென்னை கவர்னரும் கல்கத்தா கவர்னர் ஜெனரலும், மன்னரது கோரிக்கையை ஏற்று ஏன் நீதி விசாணை செய்யவில்லை? அவர்கள் நாட்டு நீதி வழியில் கூட செயல்படவில்லை. ஏன்?

அநீதி நிகழ்ந்து இருந்தால்தானே குற்றச்சாட்டுகளும் நீதி விசாணையும் தேவைப்படும். ஆனால் அன்றைய அரசியலில், அநீதிக்கு அடைக்கலம் கொடுத்து அவைகளை அமுல்படுத்தும் அக்கிரமக்காரர்களாக வெள்ளையர்கள் விளங்கிக் கொண்டிருந்த அவர்களது அக்கிரம ஆட்சியின் பிரதிபலிப்பாக அவர்களது இனத்தவர்களே, அமெரிக்க நாட்டில் கி.பி. 1776-83 வரை அவர்களை எதிர்த்துப் போரிட்டனர். வெற்றியும் விடுதலயும் பெற்றனர். உலக வரலாற்றில் அந்த இயக்கம் அமெரிக்க நாட்டு விடுதலைப் போராக இன்றும் போற்றப்படுகிறது. அவர்களது சிறந்த அரசியல்வாதியான எட்மண்ட்பர்க் இந்திய நாட்டில், பரங்கியர் இழைத்த கொடுமைகளை இங்கி


  1. Rajaram Row, T., Ramnad Manual (1891), p. 248