பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

133

முகத்திலிருந்து வங்காளத்திற்குப் பயணம் சென்று வந்த விவரத்தைத் தெரிவித்தார் தருமப்பிள்ளை.[1]

கிழக்கரையைச் சேர்ந்த எல்லத்தண்டல் என்ற மாலுமி செலுத்திய கப்பலில் 40 நாட்களில் கல்கத்தா துறைமுகம் சென்று அடைந்ததையும், அங்கு சங்குகளில் ஒரு பகுதியை 20,000-தங்க முகராக்களுக்கு விற்பனை செய்து, அவைகளைக் கொண்டு சிறந்த வகை அரிசி, பட்டு, மற்றும், பலவிதமான சாமான்களைக் கொள்முதல் செய்து இராமனாதபுரத்திற்கு அனுப்பிவிட்டு, தாம் அங்கிருந்து வியாபாரத்தில் ஈடுபட்டதையும், அப்பொழுது கலெக்டர் ஜாக்ஸன் துாண்டுதலின் பேரில் ராணி மங்களேஸ்வரி நாச்சியார், இராமனாதபுரம் மன்னருக்குச் சொந்தமான சங்கு வியாபார முதலீடுகளை, அவரது பதவி நீக்கத்திற்குப் பின்னர், தமக்கே சொந்தமானவை என கல்கத்தா சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்த வழக்கை[2] இராமனாதபுரம் மன்னர் சார்பாக அவர் வாதாடி வெற்றி கொண்டமையும், சங்கு வியா பாரத்தில் ஈட்டிய வருவாயை அப்பொழுதைக்கப்பொழுது திருச்சிக் கோட்டையில் உள்ள சேதுபதி மன்னருக்கு, யாழ்ப்பாணம் வைத்தியநாதன். நாகப்பட்டினம் சுப்பராயப்பிள்ளை, வீரப்பெருமாள்பிள்ளை, கீழக்கரை அகமது நெய்னா, மீரா நெய்னா ஆகியவர்கள் மூலம் அனுப்பி வைத்த விவரங்களை, தருமபிள்ளை கலெக்டரது விசாரணையில் தெரிவித்தார்.[3]

இந்த வங்காள வியாபாரத்தின் ஒரு பகுதியைக்கூட பறிமுதல் செய்ய இயலாமல் போய்விட்டது. ஒருபுறம் கும்பெனியாருக்கு ஏமாற்றம் தந்தாலும், இன்னொரு முக்கிய விஷயம் அவர்களுடைய சிந்தனையை தீவிரமாகக் கவர்ந்தது. அதாவது கடந்த ஐந்தாண்டுகளில், வங்காளத்திலிருந்து இராமனாதபுரம் அாசருக்குக் கிடைத்த பணம் முழுவதும், முதுகுளத்துர் பகுதியில் கிளர்ந்து எழுந்த கிளர்ச்சிக்கு பயன்பட்டிருக்க வேண்டும் என்ற உறுதியான முடிவிற்கு கலெக்டர் வந்தார். அதனை


  1. Military consultations, 105 A, 4-9-1800, p. 2613
  2. Military consultations, Vol. 105 A, 4–9–1800, р. 2608-22.
  3. Revenue consultations, Vol. 105, 21–8–1800, pp. 2615-16.