பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

123

னேறிச் செல்ல இயலாது இராமனாதபுரம் கோட்டைக்குத் திரும்பினார்.[1] இன்னொரு அணி மேஜர் கிரீம்ஸ் தலைமையில் 100 பேர்களுடன் 50 துப்பாக்கிகளுடனும் 200 ஈட்டிக்காரர்களுடனும் மற்றொரு வழியாக மேற்கே காமன் கோட்டை பாதையில், தெற்கே முதுகுளத்துருக்குப் புறப்பட்டது. ஆனால் இந்தக் குழுவினரும் தங்களது திட்டப்படி முதுகுளத்துாரை அடைய முடியவில்லை.[2]

மிகவும் பீதியடைந்த கலெக்டர் லூவிங்டன், பாளையங்கோட்டையுடன் தொடர்பு கொண்டு மேஜர் பானர்மேனைப் புறப்பட்டு வருமாறு கேட்டுக் கொண்டார்.[3] அவரும் மூன்று பவுண்டர் பீரங்கி அணியுடன் புறப்பட்டு 26-5.1799-ல் பள்ளிமடம் வந்து சேர்ந்தார். மதுரையிலிருந்து மேஜர் டிக்பர்ன் தலைமையில் இன்னொரு சிறிய அணியும் பள்ளிமடம் வந்து மேஜர் பானர்மேனுடன் சேர்ந்து கொண்டது. பிறகு கமுதியை நோக்கி ஒரு அணியும் ஆப்பனுாரை நோக்கி இன்னொரு அணியுமாகப் புறப்பட்டன. மற்றொரு சிறிய அணி தளபதி கிரிப்பிஸ் தலைமையில், குமாரகுறிச்சிக்கு சென்றது. இதிலிருந்து பிரிந்த இன்னொரு சிறிய அணி காக்கூர், சாமிப்பேட்டை வழியாக குமாரகுறிச்சிக்கு சென்றது. சேதுபதி மன்னரது முன்னாள் பிரதானியான முத்தையாபிள்ளையின் சகோதரர் முத்துக்கருப்ப பிள்ளையின் தலைமையில் கிளர்ச்சிக்காரர்கள் கிடாத்திருக்கை அருகே பரங்கிப் பட்டாளத்தை ஆவேசத்துடன் எதிர்த்தனர்.[4]

நானூறு பேர்கள் கொண்ட அந்த அணியில் அத்தனைபேரும் ஆயுதங்களைத் தாங்கியவர்களாக இருந்தனர். ஒரு சிலரிடம் துப்பாக்கிகளும் 'மாட்ச்லாக்கும்' இருந்தன. ஊருக்கு அரை மைல் தொலைவில் இருந்த வெளியில், பட்டப்பகலில் தங்களது தாக்குதலை பயமின்றித் தொடுத்தனர். இராமனாதபுரம் அரசரது முன்னாள் பிரதானியாக இருந்த முத்துக்கருப்ப


  1. Madurai Collectorate Records, Vol. 1157, 2-5-1799
  2. Ibid., 27-4-1799.
  3. Military consultations, Vol. 253 A, 17-5-1799, р. 2972.
  4. Revenue consultations. Vol. 92 (A). 9-5-1799. pp. 998-1000.