பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

எஸ். எம். கமால்

தமது மேலிடத்திற்கும் அறிக்கை செய்தார்.[1] இதனைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளிக் கோட்டையில், இராமனாதபுரம் அரசரைச் சந்தித்து விட்டுச் செல்லுபவர்கள் மீது கண்காணிப்பு கடுமையாக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து மறைந்துவிட்டன. இராமனாதபுரம் அரசர் மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். சிவகங்கைச் சீமைகளில் சென்ற ஆண்டு ராணி வேலுநாச்சியார் மறைந்த பிறகு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை.

தென்னிந்தியாவில் கும்பெனியாரது கொடுங்கோன்மைக்கு எதிராக இயங்கிய கிளர்ச்சிக்காரர்கள் அனைவருடனும் தொடர்பு கொண்டார். சிவகங்கை பிரதானி சின்னமருது சேர்வைக்காரர் திண்டுக்கல்லில் மைசூர் தளபதி தூந்தியாவின் தலைமையில் கூடிய புரட்சிக்காரர்களது கூட்டத்தில் அவர் கலந்து கொண்ட விவரம், கும்பெனியாரின் காதுகளுக்கு எட்டியது.[2] அன்றிலிருந்து அவரது நடவடிக்கையை கும்பெனியார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அதுவரை சின்னமருது சேர்வைக்காரரை, தங்களது 'விசுவாசமுள்ள நண்பராகவே' அவர்கள் கருதி வந்தனர். கும்பெனியார் பணியில் இருந்த தளபதி மார்ட் டின்ஸ்-தளபதி வெல்ஷா, கலெக்டர் சல்லிவன் ஆகிய வெள்ளையரின் பாராட்டுதலையும் நட்பையும் அவர் பெற்றிருந்தார். சிவகங்கைக்குத் தனியாக வேங்கன் பெரிய உடையாத் தேவர் என்ற அரசர் இருப்பதை மறந்து சிவகங்கை சீமை சம்பந்தப்பட்ட கடிதப் போக்குவரத்துக்களை சிவகங்கை பிரதானி சின்ன மருது சேர்வைக்காரர் என்றே எழுதி வந்தனர். கும்பெனியார் சிவகங்கைச் சீமையில் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த தளபதி மயிலப்பனைப் பிடித்துக் கொடுக்குமாறு கூட கலெக்டர் லூவிங்டன் சின்ன மருதுவிற்கு ஒருமுறை கடிதம் எழுதினார்.[3] அந்த அளவிற்கு சிவகங்கைப் பிரதானி மீது கும்பெனியாரது


  1. Military consultations, Vol. 10.5 A, 4-9-1800, pp. 2611-12, 265 2.
  2. Rajayyan, K. Vol. South Indian Rebellion, 1800, 1801. p. 114.
  3. Madurai Collectorate Records. Vol. 1133. 17-3-1801. p. 197.