பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

99

என்மீது புகார் கொடுக்காத நிலையில் அவர்களிடம் புகார் கொடுக்கத் துாண்டுவது எங்குமே இல்லாத புதுமையாக உள்ளது!

'கோட்டைக்குள் சின்ன மருது சேர்வை வரவழைக்கப்பட்டு அவருக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. எனது பிரதானி நீக்கப்பட்டு முத்திருளப்ப பிள்ளைக்கு நிர்வாகம் அளிக்கப்பட்டுள்ளது. அரண்மனையிலுள்ள பெண்டுகள் தொடர்ந்து பயமுறுத்தப்படுகின்றனர். எனது முந்தைய கடிதத்திற்குப் பிறகும் கூட, பெண்டுகளிடமிருந்து ஒன்பதினாயிரம் பக்கோடா பணம் பறித்துச் செல்லப்பட்டுள்ளது. இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை கலெக்டர் பவுனி ஒரு பெண் பணியாளரை அனுப்பி எனது பெண்டுகள் உடையதும் என்னுடையதுமான அணி மணிகளை அளித்து விடுமாறு நிர்ப்பந்தித்து வருகிறார். கும்பெனியாரது இத்தகைய கொடுஞ்செயலை நான் எப்பொழுதும் கேட்டதும் இல்லை, கண்டதும் இல்லை.

'தங்களது ஆணை என்று கூறி தளபதி பிலாய்டு எனது சமையல்காரரையும், இன்னும் மூன்று சேர்வைக்காரர்களையும் இராமநாதபுரத்திற்கு கைதிகளாக அனுப்பி வைத்துள்ளார். இதனால் இங்குள்ள எஞ்சிய பணியாளர்களும் என்னை விட்டு அகலுவதற்கு ஏற்ற நடவடிக்கையாக உள்ளது. ஏற்கெனவே உள்ள சிப்பாய்களுக்கும் கூடுதலாக, நவாப்பினது வீரர்களும், என்னைக் கண்காணிப்பதற்கு இங்கு அமர்த்தப்பட்டுள்ளனர். எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள சிறு அறை பகல் நேரத்தில் திறக்கப்பட்டு, இரவு நேரத்தில் பூட்டி வைக்கப்படுகிறது. மன்னர்களை நடத்தும் முறை இது அல்ல. என்னையும் எனது பெண்டுகளையும் இத்தகைய கொடுமைகளுக்கு உட்படுத்துவது முறையற்றதாகும்.

'இத்தகைய இழிவான நடவடிக்கைகளுக்குக் காரணம் கோரிய எனது முந்தைய இரண்டு கடிதங்களுக்கும், இதுவரை பதில் அளிக்காமல் இருப்பது எனக்கு வேதனையையும் வியப்பையும் அளிக்கிறது. நான் இழைத்த குற்றம் என்ன என்பதை தெரிவிக்க முன் வந்தால், அதனைப் புரிந்து கொண்டு அதற்குரிய பதிலையும் அளிக்க இயலும், தாங்கள் எனது கோரிக்கையை நேர்மையுடன் ஆராய்ந்து சரியான தீர்வுக்கு வருவதற்கும் அது உதவும். இறைவன் பொருட்டாவது எனது கோரிக்