உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

இதற்கான சட்டம் டில்லியில் தயாராகி வருகிறது. இதற்கும் நமது பிரச்சாரம்தான் முக்கிய காரணமாகும்

மணவாழ்க்கையில் இருவரும் ஒன்றுபட்டு வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டால், அந்த நிலைமையில் அவர்கள் விவாக விடுதலை பெறும் உரிமை இருக்கவேண்டும் என்று நாம் கூறிவந்தோம்.

நாம் இப்படிக்கூறிய நேரத்தில் பலரும் ஏளனம் செய்தனர். எதிர்க்கவும் எதிர்த்தனர். ஆகாத வேலை தகாத காரியம் எனறு கூடக் கூறினர். கட்டிய மனைவிக்கு விடுதலை உரிமை தருவதா என்றெல்லாம் ஆர்ப்பறித்தனர்.

இவைகள் அத்தனையும் தாங்கி, நாம் தொடர்ந்து செய்து வந்த பணி இன்று பலன்தர ஆரம்பித்துவிட்டது.

எத்தனையோ குடும்பங்களில் நாம், கணவனால் கவனிக்கப்படாத மனைவியரைக் காண்கிறோம். குடிகாரக் கணவனின் அடிக்கும் உதைக்கும் தினம் தினம் ஆளாகி அவதியுறும் மனைவிமாரின் கண்ணீரைக் காண்கிறோம். கட்டிய மனைவியைக் கண்ணெடுத்தும் பாராது, விலைமாதரிடமே திரிந்துவரும் வீணர்களால் மனம் வெதும்பித் துடித்திடும் பெண்களையும் நாம் பார்க்கிறோம்.

ஆகவே தான் கணவனால் கொடுமைப்படும் மனைவியும் சரி, அல்லது மனைவியினால் தொல்லைக்கு ஆளாகும் கணவனும் சரி, தஙகளுக்குள் பிடித்தமில்லாதபோது விவாகரத்து செய்து கொள்ளும் உரிமை பெற்றாக வேண்டுமென்று நாம் வலியுறுத்தி வந்தோம்

விவாகரத்துரிமை இருந்தால், பொறுத்தமற்ற திருமணங்கள் தவறுதலாக நடந்து விட்டாலும் பின்னர்