நேதாஜியின் வீர உரைகள் ——————————————— |
|| 99 |
சுதந்திரத்துக்காகப் பாடுபடும் இந்திய தேசபக்தர்களுக்குமிடையே நெருங்கிய நிரந்தரத் தொடர்பு நிலவுவதும் எல்லோரும் அறிந்ததுதான். நமது ஏஜெண்டுகளில் சிலரை, பிரிட்டிஷ் அதிகாரிகள் அடிக்கடி கைது செய்வதும் துன்புறுத்துவதும், கொலை செய்வதுமாக இருக்கின்றனர். ஆயினும் நமது தொடர்புக்கு எவ்விதக் குறைவும் ஏற்பட்டதேயில்லை.
இந்த உண்மைகளையெல்லாம் கவனிக்கும்போது, நம் ராணுவம் எல்லைதாண்டி மூவர்ணக் கொடியுடன் நமது புண்ணிய பூமியில் புகுந்து, கொடியைப் பறக்க விட்டதும், அங்கு சந்தேகத்துக்கிடமில்லாத உண்மையான உறுதியான உக்கிரமானதோர் புரட்சி நிகழ்ந்து தான் தீருமென்பதை அறிவோம். அந்தப் புரட்சி, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவைக் கண்டுவிடுமென்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
நண்பர்களே!
இன்று நாம் செய்து வருவதெல்லாம் இறுதிப் போருக்கான தயாரிப்புகள்தான். இந்திய எல்லை தாண்டியதும் நமது போராட்டம் ஆரம்பமாகும். அதன்பின்னர் ‘டில்லி சலோ' தொடங்கும். அந்த முன்னேற்றம், கடைசிப் பிரித்தானியன் துரத்தப்படும்வரை – அல்லது அவன் சிறைக் கம்பிகளுக்குள்ளே அடைபடும் வரை நீடிக்கும். டில்லியில் - வைசிராய் மாளிகையில் நம் தேசீயக் கொடியை உல்லாசமாகப் பறக்கவிட்டு, பழைய செங்கோட்டையில் நமது ராணுவம் வெற்றி அணி வகுப்பை நடத்தும்வரை ‘டில்லி சலோ' தான் நமது மந்திரம்.
நண்பர்களே!
நமக்கு மகத்தான ஆதரவும் மனப்பூர்வமான ஒத்துழைப்பும் நல்கிய நிப்பொன் மக்கள் - நிப்பொன் சர்க்கார் இம்பீரியல் நிப்பொன் ராணுவம், ஆகியோருக்கு நமது மனமார்ந்த வந்தனம் உரியது. இதுவரை நாம் பெற்றுள்ள உதவிகளுக்கு நமது நன்றியறிதலைத் தகுந்த முறையில் தெரிவிக்கும் நந்நாள் வெகுதொலைவிலில்லை. இன்றைய நிலைமையில் அவ்வுதவிகளைப் பாராட்டும் பொருட்டு, நிப்பொன் இம்பீரியல் ராணுவத்துக்கு ஐந்து விமானங்கள் கட்டும் செலவுத்