உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
122 ||

அப்பாத்துரையம் - 6




இன்னும் உயரமான குன்றுகள், ஆழமான பள்ளத்தாக்குகள்,அகலமான குன்றுகள் இருக்கின்றன. எத்தனை தான் கரடுமுரடான வழியாகயிருந்தாலும், அவையத் தனையையும் தாண்டிச் செல்லவும், எவ்வளவு நீண்ட தூரத்தையும் கடந்து விடவும் நமது படைகள் தயாராகிவிட்டன. பகைவர்கள் செய்கின்ற ஏளனம், நமக்கு நேரிய பாதையைக் காட்டுவதோடு திட நம்பிக்கையையும் அளிக்கிறது. ஏளனம் செய்வதை நிறுத்திவிட்டு. என்றைக்கு நம்மை அவர்கள் புகழத் தொடங்குகிறார்களோ, அன்றுதான் நமக்குக் கெடுதி நேரிடும். நமது வேலைகள் யாவும் மிகத் திறமையானதும் சிறந்ததாகவும் இருப்பதால் தான், அவர்கள் கண்களுக்கு நாம் தூஷிக்கப் படத் தகுந்தவர்களாகிறோம். அவர்கள் தூஷணை நமக்குப் பெருமை. ஆதலால் அவர்களை நாம் போற்றுகிறோம்.

நண்பர்களே! உங்களிடம் சில தினங்களுக்கு முன் சில கோரிக்கைகள் விடுத்தேன். நம் சர்வாம்சப் படை திரட்டலுக்கு நிங்கள் முழு ஆதரவு கொடுத்தால், உங்களுக்காக இரண்டாவது போர் முனையைத் திறந்து விடுகிறேனென்று உறுதி கூறியிந்தேன். அந்த உறுதி மொழியை இப்பொழுது நிறைவேற்றி விட்டேன். நமது போரின் முதற் படலம் முற்றுப் பெற்று விட்டது. நமது வெற்றி வீரர்களுடன் நிப்பொனிய வீரர்களும் ஒரு மித்து நின்று போர் புரிகின்றனர். இப்பொழுது பகைவர்களைப் புறங்காட்டி யோடச் செய்து கொண்டே இந்திய மண்ணில் நம் வீரர்கள் போரிடுகின்றனர். இந்நேரம் உங்கள் கடமையை நிறைவேற்ற கச்சையை வரிந்து கட்டுங்கள். ஆள், பணம், பொருள் எல்லாம் அதிகமாகத் தேவை. அவைமட்டுமல்ல; கொண்ட இலட்சியத்தை நிறைவேற்றியே ஆக வேண்டுமென்ற மனோ திடமும் நம்மிடம் உறுதியாக இருக்க வேண்டும். அந்த உறுதி தான் வீரச் செயல்களுக்கும் பழுதில்லா வெற்றிக்கும், பூரண சக்தியைக் கொடுக்கும்.

சுதந்திரம் நம் கண்ணுக் கெட்டிய தூரத்தில் இருக்கிறது. சுதந்திர இந்தியாவை உயிரோடிருந்து பார்க்க வேண்டுமென்று நினைத்தால், அது சகிக்க முடியாத ஆபத்தைத் தருகின்ற பெரும் தவறேறயாகும். பிழைத்திருந்து சுதந்திரத்தைக் காண வேண்டுமென்ற நினைப்பு யாருக்கும் இருக்கக்கூடாது. இன்னும்