உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

மறைத்தன; மாற்றின. மறைந்த அல்லது ஆங்காங்கே அள்ளித் தெளித்தாற்போல பல பண்புடைய குடும்பங். களில் தென்படும் மரபுகள் கினேந்து மகிழத் தக்கன. அவற்றுள் ஒன்றிரண்டைக் காணலாம்:

பெண் பக்குவமடைந்ததும் மணமகன்பற்றிய பேச்சு எழும். உறவினராயினும் புறவினராயினும் மாப்பிள்ளே பார்க்கப் போதலும் பெண் பார்க்கப் போதலும் நிகழும். பெண் பார்க்கச் செல்வதில் சில மரபுகள் தமிழரது குறிப்பில் உணர்த்தும் - குறிப்பில் உணர்ந்துகொள்ளும் நாகரீகத்தைப் புலப்படுத்துகின்றன.

பெண் பார்க்கச் சில ஆடவரும் மூன்று மகளிரும் செல் வர். அவருள் மகளிர் மூவரே இன்றியமையாதவர். செல் லும் மகளிர் மூவரில் ஒருத்தி இளம்பெண்ணுக இருப்பாள். இவள் மணமகனது தங்கையாகவோ அந்த அளவு நெருக்க முள்ளவளாகவோ அமைவாள். அடுத்து இடைகிலே அகவை. யுள்ள ஒருத்தி இடம் பெறுவாள். இவள் மணமகனது. குடும்பத்தில் பொறுப்பு வாய்ந்தவளாவாள். மூன்ருமவள் முதியவளாவாள். இவள் உறவினளாகவோ புறவின . ளாகவோ அமையலாம். இவள் சென்று பழக்கப்பட்ட வளாகப் பல குடும்பங்களுக்கும் செல்வதுண்டு.

மூவர் செல்வது ஏன்? அதனிலும் இவ்வாறு மூன்று' வகையாகச் செல்வது ஏன்? இவ்வமைப்பில் ஒரு கருத்து உண்டு.

இளம் பெண் மணமகளது அழகு, உடலமைப்பு, கூந்தல்,. கிறம், ஒப்பனே, தோற்றம் முதலியவற்றைக் கூர்ந்து நோக்கு. வதற்காகச் செல்லுபவள். மீண்டு வந்ததும் மணமகனுக்கு, அவற்றை அறிவிப்பவள்.

இடைகிலே அகவையாள் அக்குடும்பச் செல்வகிலே, உறவுப் பாங்கு, குடும்ப அமைப்பு முதலியவற்றை - உசாவி'