உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

195

இப்போதும் அவன் கவர்ச்சியில் ஈடுபட்டுவிட்டாள் என்றே தோன்றிற்று.

தன்னைக் கண்டது பாவ்லோவ்ஸ்கிக்குப் பிடிக்கவில்லை என்பதை அவன் முகக் குறியிலிருந்தே வெல்ச்சானினாவ் உணர்ந்தான். தனியே அவனைப் பாவ்லாவ்ஸ்கி அழைத்துச் சென்று, “நாம் பழைய நண்பர்கள். ஆனால் முன்மாதிரி நட்பை நான் விரும்பவில்லை. நீ தயவு செய்து என் திசைக்கு வரக்கூடாது' என்று கெஞ்சினான். வெல்ச்சானினாவ் அவன் கலக்கந் தெளிவித்துத் தான் வேறு வண்டிக்குப் போய்விடுவதாக உறுதி கூறினான். ஆனால் திரும்பி வந்த பொழுது அழகி அவனை மீண்டும் தன்னுடனே தன்னுடனே இருக்கும்படி வற்புறுத்தினாள். பாவ்லோவ்ஸ்கி ஏலமாட்டாக் கோபத்தால் துடித்தான்.

வெல்ச்சானினாவுக்குத் தான் நாடிச் சென்ற இன்பத்திலும் பாவ் லோவ்ஸ்கியைத் தொடர்ந்து செல்வது மிகவும் கவர்ச்சி கரமாகவே தென்பட்டது. ஆயினும் லிஸாவின் எண்ணம் அவனை அடக்கியது. அதே சமயம் லிஸாவுக்காக அவன் மீது சிறிது கடுமை காட்டவும் அவன் எண்ணினான். அவனிடம் காதுடன் காதாக “நீ ஒரு தடவை என் கழுத்தை அறுக்க வந்தாய். இதை உன் மனைவியிடம் கூறினால் நல்ல வேடிக்கை யாயிருக்குமல்லவா” என்றான்.

பாவ்லோவ்ஸ்கி பதறினான்.

66

வெல்ச்சானினாவ்,

வேண்டாம். என்னைப் போகவிடு. நான் உன் திசைக்கே இனி வரமாட்டேன்” என்றான்.

"நானும் உன் திசைக்கு இனி வரவில்லை. ஆனால் நினைவிருக்கட்டும். நீ என் திசைக்கு இனி வந்தால், உன் பழைய தொடர்புகளையெல்லாம் வெளியே அவிழ்த்துவிட்டு

விடுவேன்” என்று வெல்ச்சானினாவ் எச்சரித்தான்.

குழல் ஊதிற்று. புகைவண்டி நகரத் தொடங்கியது. வெல்ச்சானினாவ் வேறு வண்டியில் ஏறிகொண்டான்.சந்திப்பில் அவன் முன் திட்டமிட்டபடியே வேறு கிளைப் பாதையில் சென்றான்.பாவ்லோவ்ஸ்கியின் மனைவியைக் கண்ட நிலையில் தான் பழய நாடகத்தை மீண்டும் ஆடுவதற்குரிய சூழ்நிலை

ன்னும் மாறவில்லை என்பதை அவன் உள்ளம்