உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

எடுக்கப்படுகின்றன.

265

அதுபோலவே மனிதன் தன் அறிவுநிலையாகிய சுரங்கத்துக்குள் ஆழ்ந்து அகழ்ந்து, தேடினாலன்றி எந்த மெய்ம்மைகளையும் கண்டு கிட்டமுடியாது. அறிவு, உணர்வு, ஆற்றல் ஆகிய மூன்றும் இத்தன்னாராய்ச்சியின் விளைவுகள். இவற்றைப் பெற அவன் தன் கருத்துக்கள் ஒவ்வொன்றின் தோற்ற வளர்ச்சி தளர்ச்சிகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அவற்றைத் தூண்டியும் அடக்கியும் மாற்றியமைத்தும் பழக்கி, அச்செயல்களால் தன்மீதும் பிறர்மீதும், தன் வாழ்வின்மீதும் பிறர் வாழ்வின்மீதும் ஏற்படும் தாக்குதல் விளைவுகளை அவன் கூர்ந்து கவனித்து, அவற்றின் காரண காரியத்தொடர்புகளை அறிய வேண்டும். பின் இவ்வறிவை அவன் தன் வாழ்வின் ஒவ்வொரு செயலிலும், மிக நுட்பமான நாள்முறைச் செய்திகளிலும் ஈடுபடுத்திச் செயலின் பயனைப் பெருக்குவதுடன் அறிவையும் மேன்மேலும் வளர்க்க வேண்டும்.

"நாடுபவன் காண்கிறான்; தட்டுபவனுக்குக் கதவம் திறக்கப்படும்”* என்ற மெய்ம்மை இம்முறையிலேயே தனிச் சிறப்புடையது. அறிவுக்கோயிலன் கதவு பொறுமை, நீடித்த பயிற்பு, இடைவிடாச் செயலுறுதி ஆகியவற்றின் பயனாகவே திறக்கப்படும்.

1.

அடிக்குறிப்பு:

விவிலிய நூல் உரை