பிறமொழி இலக்கிய விருந்து -2
269
எண்ணங்களாகிய விதைகள் உள்ளத்தில் செப்பமுற விதைக்கப்படலாம், அல்லது அவை தாமாக அதில் விழும்படி விடப்படலாம். எந்தவகையில் நிலத்தை அடைந்தாலும் அவை வேர்கொள்கின்றன. வேர்கொண்டு அவ்வவைக்குரிய காலத்தில் அவ்வவைகள் பயன்களைத் தருகின்றன. இப் பயன்களே வாய்ப்புக்கள், சூழ்நிலைகள். நல்லெண்ணங்கள் நல்ல பயன்களை அதாவது நல்ல வாய்ப்புக்களையும் சூழ்நிலைகளை யும் உண்டு பண்ணுகின்றன. தீய எண்ணங்கள் தீய வாய்ப்புக் களையும் தீய சூழ்நிலைகளையுமே தரும்.
இங்ஙனம் புறஉலக நிகழ்வுகள் யாவும் அக உலகுக்கு இணங்கவே அமைகின்றன.புறஉலகில் இன்பமுள்ள நிகழ்வுகளும் துன்பமுள்ள நிகழ்வுகளும் இரண்டும் இறுதியில் மனிதன் நலத்தையே குறியாகக் கொண்டவை. தன் பயிரைத் தானே அறுவடை செய்பவன் என்ற முறையில் மனிதனுக்கு இன்ப துன்பங்களிரண்டும் நல்லறிவு கொளுத்தும் பண்புக் கூறுகளே.
ஒருவன் உள்ளார்ந்த அவாக்கள், கருத்துக்கள், கனவார்
வங்கள் ஆகியவை துப்புரவற்ற மாயமின்னொளிகளாக நின்று அவனை ஏய்க்கலாம். அல்லது உலையா நல்லொளியாக இருந்து நன்முயற்சிப் பாதையில் அவனை ஊக்கலாம். இவ்வொளிகளுள் எதனை இயங்க விட்டாலும் அது இயங்கவிடுபவனை இயக்குவது உறுதி. தத்தம் பயனிறைவையும் அதற்கேற்ற சூழ் நிகழ்வுகளையும் உண்டுபண்ணுவதும் உறுதி. இங்ஙனம் வளர்ச்சியோடொத்த சூழல் வளர்ச்சியும் ஒரே வளர்ச்சிச் சட்ட அமைதியின் செயல்கள் ஆகின்றன.
ஒருவன் சாராயக்கடைக்குச் செல்லுவது சாராயக் கடையின் குற்றத்தினாலன்று. அவன் உள்ளார்ந்த குடி விருப்பத்தினாலேயே. ஒருவன் சிறைக்குச் செல்வதும் அதுபோலச் சிறையாட்சி அல்லது கொடுங்கோன்மையின் குற்றத்தினாலன்று; அவன் தன் உள்ளத்தின் கீழ்த்தரமான குள்ள அவாக்கள் காட்டிய வழியில் சென்றதன் பயனாகவே. ஏனெனில் தூய உள்ளம் படைத்த எவனும் திடுமென வெளிக்காரணங்களால் குற்றத்தின் பக்கம் பாய்ந்துவிட முடியாது. குற்ற எண்ணங்கள் நீண்ட நாள் உள்ளேயிருந்து குறுகுறுத்துக் கொண்டிருந்தாலல்லாமல், வெளிவாய்ப்பு ஏற்பட்டவுடனே அது பாய்ந்து அவற்றைப்