உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




198

66

அப்பாத்துரையம் - 39

"ஏற்றம் கவிழ்ந்ததன் காரணத்தை அறிந்து யாராவது வந்துவிட்டால், உயிருடன் போக முடியாது. அதற்குள் பாரத் வீரனை இட்டுக்கொண்டு ஓடிவிட வேண்டும்” என்றும் அவன் முடிவு செய்தான்.

ஆனால் துணிவது எளிது. நிறைவேற்றுவது அரிது. ஏனென்றால், அவனொன்று நினைக்கப் பாரத வீரன் மற்றொன்று நினைத்தான். ஓடுவற்கு மாறாக, அவன் வெற்றி விழாக் கொண்டாட எண்ணினான். 'ஏற்றம் முறிந்ததற்காக ஓடுவதா, கவந்தன் மாண்டதற்காக மகிழ்ச்சிவிழாக் கொண்டாடுவதா!’ இந்த ஆராய்ச்சியிலும் வாதத்திலும் வீரனும் பாங்கனம் அரை மணி நேரத்துக்குமேல் ஈடுபட வேண்டியதாயிற்று.

உண்மையில் பட்டிமந்திரி ஐயுற்றது முற்றிலும் சரியே. ஏற்றம் இறைத்த இருவரில் ஒருவன் ஏற்ற முறிவால் படுகாயம் அடைந்தான்.மற்றவன் மண்டையிலும் காலிலும் காயமுற்று நீரில் அமிழ்ந்திறந்தான். வரப்பில் வேலை செய்த ஓரிருவர், அதை அடுத்து நாலைந்து கணங்களுக்குள் உற்றார், உறவினர் வரத் தொடங்கினர். கிணற்றில் விழுந்தவனை எடுப்பதிலும், காயம் பட்டவர்களைக் கவனிப்பதிலுமே அவர்கள் சில நேரம் ஈடுபட்டிருந்தனர். உற்றார் உறவினரோ உரக்க அழுவதிலேயே ஈடுபட்டிருந்தனர். ஆனால் தொழிலாளரில் சிலர் மட்டும் ‘ஏற்றம் ஏன் முறிந்தது, கற்கள் ஏன் அவிழ்ந்தன' என்ற ஆராய்ச்சியைத் தொடங்கினர்.

பாரத வீரன் பட்டிமந்திரியும் ஏற்றத்தின் பின் பகுதியையே கண்டனர். சோளக் கொல்லையின் வேலியும் சோளப்பயிரும் மறுபகுதியையுமே ஏற்றம் இறைப்பவரையும் மறைத்தன. இதே வேலியும் பயிருந்தான் மற்றவர்கள் கண்களுக்கும் அவர்களை மறைத்தன. நிகழ்ச்சியின் காரணத்தை ஆராய முற்பட்ட தொழிலாளர்கள் மறுபுறம் வந்து பார்த்துவிட்டனர். உண்மை நிகழ்ச்சியை அறிய முடியாவிட்டாலும், நிகழ்ச்சிக்குப் பின்னால் ருப்பவர்கள் தான் பொறுப்பாளிகள் என்றறிய நெடுநேரம் ஆகவில்லை.

வாதத்தில் ஈடுபட்டிருந்த வீரனும் பாங்கனும் நையப் புடைக்கப்பட்டனர் என்று கூறவேண்டுவதில்லை. உண்மை