பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தற்போதுள்ள சமண ஊர்களும் சமணரும்

173



பயக்கும் என்பதை விக்கிரமாதித்தன் உணர்ந்தான். இவ்விரு காரணங்களாலும் அவன் பல்லவநாட்டின்மீது படையெடுத்தான்.[1]

பட்டயங்கள்

இப் போரைப் பற்றிப் பல்லவர் பட்டயம் ஒன்றேனும் கூறுகின்றிலது. இதற்குக் காரணம் இம் முறை வெற்றி பெற்றவர் சாளுக்கியர் ஆதலே ஆகும். இரண்டாம் கீர்த்தி வர்மன் (கி.பி. 746-757) வெளியிட்ட (முன் சொன்ன) வக்கலேரி, கேந்தூர்ப் பட்டயங்களே இப் போர் நிகழ்ச்சிகளை நமக்கு அறிவிக்கின்றன. சாளுக்கியர் மரபில் வந்த அரசரது பெருமையைக்குலைத்த பல்லவர் மரபைப் பழி வாங்க இரண்டாம் விக்கிரமாதித்தன் துணிந்தான்; உடனே பெரும் படையுடன் காஞ்சியை நோக்கி விரைந்தான்; போரில் பல்லவமல்லனைத் தோற்கடித்தான்; பல்லவன் ஓடிவிட்டான். எங்கே? ஒருகோட்டைக்குள் ஓடிவிட்டான். இதனால், காஞ்சி சாளுக்கியன் வசப்பட்டது. சாளுக்கியன். பல்லவனுடைய கடுமுகவாத்தியம், சமுத்திர கோஷம், கத்வாங்கக் கொடி, போர் யானைகள், சிறந்த விலையுயர்ந்த மணிகள் முதலியவற்றைக் கைப்பற்றினான். பிறகு விக்கிரமாதித்தன் காஞ்சி நகரத்தை அழிக்காமல் உள்நுழைந்தான். இதே சமயத்தில் அவன் மகனான கீர்த்திவர்மன் தந்தை இசைவுபெற்று ஓடிய பல்லவனைத் துரத்திச் சென்று, பல இடங்களில் முறியடித்தான். இதற்கிடையில் விக்கிரமாதித்தன் கயிலாசநாதர் கோவில் செல்வத்தைப் பார்வையிட்டு வியந்து, அதனை (தான் எடுத்துக்கொள்ளாமல் அக் கோவிலுக்கேவிட்டுவிட்டான்.) இதனைக்கயிலாசநாதர்கோவிலில் உள்ள அவனது (பழையகன்னடத்தில் எழுதப்பட்ட) கல்வெட்டே கூறுகின்றது.[2] அவன் ஏழைகட்கும் மறையவர்க்கும் பொன்னை வழங்கினான்.[3]


  1. M.V.K. Rao’s “Ganga’s of Talakad, p.53.
  2. Ep, Indica, Vol III, p.360.
  3. Ep. Indica, Vol. IX, pp.205, 206.