பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராசசிம்மன்

161



கல்வெட்டுகள்

கைலாசநாதர் கோவில் நிறையக் கல்வெட்டுகள் இருகின்றன.[1] அவை கி.பி.7ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தை ஆண்ட பல்லவர், சோழர் கல்வெட்டுகளாக இருக்கின்றன. அவற்றுள் கோவில் கட்டிய இராசசிம்மன் கல்வெட்டுகளும், அவன் மகனான மூன்றாம் மகேந்திரன், அவன் மனைவி ரங்கபதாகை முதலியோர் கல்வெட்டுகளும் உள்ளன. பல்லவரைவென்று தொண்டைநாட்டைஆண்டமுதற் பராந்தகன், இராசராசன். இராசேந்திரன், முதற் குலோத்துங்கன் இவர் தம் கல்வெட்டுகள் பலவாகக் காண்கின்றன. சோழர் காலத்தில் இக் கோவில், மாடவீதிகள், வெளிச்சுற்று, மடவளாகம், மாடவீதி, மடங்கள் முதலியவற்றையும் அளவிடற்கரிய செல்வத்தையும் பெற்றிருந்தது என்பது இக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. இரண்டாம் நந்திவர்மன் காலத்திற் காஞ்சியைக் கைப்பற்றிய இரண்டாம் விக்கிரமாதித்தனது கன்னடக்கல்வெட்டும் இருக்கின்றது.அதனில், இராசசிம்மன் கட்டிய கோவிலில் உள் பெருஞ் செல்வத்தைக் கண்டு வியந்த வல்லபன்.அதனைக் கவராது, அப் பெருமானுக்கே விட்டு விட்டான். என்பது குறிக்கப்பட்டுள்ளது. இவ்வுண்மையைச் சாளுக்கியருடைய வக்கலேரி, கேந்தூர்ப் பட்டயங்களும் பகர்கின்றன.[2]

சிறப்பு

‘கயிலாசநாதர் கோயில் திருக்கயிலையின் அளவைக் கொண்டே கட்டப்பட்டதாகும்’ என்று விபுலானந்த அடிகள் போன்றார் கூறுகின்றனர். கயிலாசநாதர் கோவில் கல்வெட்டு இதற்கு மறைமுகமாகச் சான்று பகர்கின்றது. இராசசிம்மன் தன்னை ‘வாத்ய வித்யாதரன்’ என்பதற்கேற்ப இக் கோவிலில் யாழ் வாசிக்கும் உருவங்கள் பல செதுக்கப்பட்டுள்ளன. இவன் இசை, நடனம்,


  1. Vides II. Vol.INos, 24-30, 82-88, 144-150.
  2. Ep. Ind. Vol.V p.200. Vol.IX p.200