பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - முப்பொருள் பாகுபாடு அகத்திணை நெறியில் பொருள் வரம்பு உண்டு. உலகியல் வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் பயின்று வரும் பொருள்களை மூவகையாகப் பிரித்துப் பேசுவது அகத்திணை நெறி. அவை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று வரையறைப் - படுத்திப் பேசப்பெறும். - முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே துவது காலை முறைசிறந் தனவே பாடலுள் பயின்றவை நாடுங் காலை." (நுவலுதல்-செல்லுதல்; முறை-முறையை (Order of preference)] - என்று தொல்காப்பியர் இதற்கு விதி செய்து காட்டுவர். இவை செய்யுளில் பயின்று வருங்கால் ஒன்று ஒன்றனிற் சிறந்து, வருதலுடையது. இதற்கு நச்சினார்க்கினியர் தரும் விளக்கம்: 'முதலிற் கருவும், கருவில் உரிப்பொருளும் சிறந்து வரும். இவை மூன்றும் பாடலுட் பயின்று வருமெனவே வழக்கினுள் வேறுவேறு. வருவதன்றி ஒருங்கு நிகழா என்பது உம், நாடுங்காலே எனவே புலனெறி வழக்கிற் பயின்றவாற்றான் இம்மூன்றையும் வரை யறுத்துக் கூறுவதன்றி வழக்கு நோக்கி இலக்கணம் கூறப்படா தென்பது உம் பெறுதும். நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிருமுதலின்’ (தொல், பாயிரம்) என்று புகுந்தமையிற் பொருளும் அவ்விரண்டினாலும் ஆராய்தல் வேண்டுதலின்.' என்பது. முதல் கரு உரிப்பொருள் கொண்டே வருவது திணை. இளம்பூரணர் தரும் விளக்கம்: முறைமையாற் சிறத்தலாவது; யாதானும் ஒரு செய்யுட்கண் முதற்பொருளும் கருப்பொருளும் 1. அகத்திணை.-3 (இளம்)