பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

I. அகத்திணைத் தோற்றம்


உலகிலுள்ள மொழிகளில் தமிழ்மொழியில் மட்டிலும் பொருள் இலக்கணம் அமைந்திருப்பது அதன் சிறப்பு: அகத்திணை மேலும் தனிச்சிறப்பு. அகத்திணை 'தமிழ்’ என்னும் சொல்லுக்கு மறுபெயராய் அமைந்துள்ளது. அகத்திணை நெறியில் மொழிவரம்பு உண்டு. இது மூவகையாகப் பகுத்துப் பேசப்பெறும்; இது விரித்தும் நுவலப் பெறும். மேலும், அகத்திணையை எழு திணைகளாகத் - எழுவகை ஒழுக்கங்களாகத்-தொல் காப்பியம் வகைப்படுத்திக் காட்டும். அகத்திணை வடித் துக் காட்டும் காதற்பாங்கு தனித்தூய்மை கொண்டது. இந்தக் காதற்பாங்கு ஐந்திணை நெறி என்று போற்றப் பெறும். ஐந்திணை நெறி ஐவகை நிலங்களில் நடப்பதாகச் சான்றோர் நாடக வழக்காகக் கவிதை புனைவது அவர்தம் புலனெறி வழக்காகும். திணைக்குப் புற நடையும் உண்டு. ஒருதிணைக்குட்பட்ட கூறுகள் பிறிதொரு திணையின் கட்டுக்கோப்போடு கலந்து நிற்கும் பாங்கு திணை மயக்கம் என்று வழங்கப்பெறும். இதற்கும் தொல்காப்பிய நெறியில் இடம் உண்டு. இன்னோரன்ன கருத்துகள் இப்பகுதியில், ஆறு இயல்களில், விளக்கம் பெறுகின்றன.