பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 அகத்திணைக் கொள்கைகள் இல்லை. தொல்காப்பியரும் கைக்கிளை பெருந்திணைகளின் பொருள்களை இருவேறு தனிச் சிறு நூற்பாக்கள் அளவில் அமைத் துக்கொண்டார். கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்' என அத்தொல்லாசிரியர் எண்ணுங்கால் முதலிடம் பெற்ற கைக் இளையும், பொருள் கூறுங்கால் அந்த இடம் பெறாதது சிந்திக்கத் தக்கது. கைக்கிளைக் குறிப்பே, பெருந்திணைக் குறிப்பே என்று அவ்விருதிணைகளின் சிறு நிலைதோன்ற அவற்றினைக் கூறும் நூற்பாக்களை முடித்துக் காட்டுவர். குறிப்பு என்ற சொல் அவ்விருதினைகளும் விரித்துப்பாடும் தகுதியுடையன அல்ல என்று சுட்டிக் கூறுவர். ஐந்திணையின் இலக்கணக்கூறுகள் மட்டிலும் பல நூற்பாக்களில் விரித்துக் கூறப்பெற்றிருத்தல் காணலாம். தொல் காப்பியப் பொருளதிகார அகத்திணையியல் 55 நூற்பாக்களை யுடையது. இஃது அகத்திணை எனப் பொதுப் பெயரைத் தாங்கியிருந்தும் இதன் 50 நூற்பாக்கள் ஐந்திணையின் நெறி களையே விரித்து மொழிகின்றன. புறத்திணை இயலுக்கு அடுத் துள்ள களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல் என்ற நான்கு இயல்களும் கூட ஐந்திணை நுதலும் அமைப்பினையே கொண்டிலங்குகின்றன. ஐந்திணைக் காதல் அறத்தின் அடிப் படையில் செல்வதாலும், உலகோர் ஒப்புக்கொள்ளும் பெற்றியை யுடையதாலும், மக்கட்கு இயல்வதாக இருப்பதாலும், இலக்கியத் திற்கு இசைந்ததாக உள்ளதாலும் சங்கத்துச் சான்றோர்கள் ஐந்திணைத் துறைகளையுடைய பாடல்களையே மிகுதியும் யாத்தனர். தொல்காப்பியரைப் பின்பற்றியே இப்பெரு மக்களும் கைக்கிளைப் பெருந்திணைகளை விரித்துப் பாடாது ஒதுக்கிடம் நல்கினர். - அகத்திணை பெருந்தலைப்பு: அதில் அடங்கியது ஐந்திணை. அகத்திணை, ஐந்திணை என்ற சொற்கள் ஒரு பொருட் பன்மொழி யன்று. எழுதிணைகளையும் ஒருங்கு சுட்டுங்கால் அகத்திணை என்னும் பொதுக் குறியீட்டை ஆளுதல் தொல்காப்பிய வழக்கா கும். அகத்திணைப் பொதுப் பெயரை ஐந்திணைப் பிரிவின் மறு பெயராகத் தொல்காப்பியம் யாண்டும் ஆண்டதில்லை. மக்கள் துதலிய அகன் ஐந்திணை', 'அன்பொடு புணர்ந்த ஐந்திணை 4. కొణణ 53-54 (இளம்) 3. - 5. ஷ்ெ-58 (இளம்) s டிெ-57 (இளம்) , களவியல்-1