பக்கம்:இருட்டு ராஜா.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்147

 இருந்தது அந்த வீட்டுக்காரன் தன் மனைவியை அடி அடி என்று அடித்துக் கொண்டிருந்தான்.

அடிக்கடி தலைதுாக்குகிற ஒரு நிகழ்ச்சிதான் இது. மாசத்தில் ஒரு தடவை அந்த வீட்டில் இந்தக் கூத்துதான். புருஷனுக்கு மனைவி பேரில் சந்தேகம். அவள் எங்கோ போய்,எவனுடனோ ஜாலிபண்ணிவிட்டு வந்திருக்கிறாள் என்று ஏசுவான். அவளும் பேச்சுக்குப் பேச்சு வீச, வார்த்தைகள் தடித்து கை வீச்சில் வந்துநிற்கும். அவன் கண்ணு மண்ணு தெரியாமல் அவளை அடித்து நொறுக்குவான்.

அதுபோன்ற சமயங்களில் தெருவோடு போகிற முத்துமாலை தன் பாட்டுக்கு நடக்கமாட்டான். புருசன் பெண்டாட்டி சண்டை; தனிப்பட்ட விவகாரம் என்று நினைக்கமாட்டான். கதவைத் தட்டி, கூப்பாடு போடுவான்.

“ஏ வீராசாமி! மாட்டுப் பயலா நீ? அவளை பொம்பிளைன்னு நெனச்சியா எருமை மாடுன்னு நெனச்சியா? இப்படி மடார் மடார்னு போட்டு அடிக்கிறியே! செத்துப் போகப் போறா, பாவம்” என்பான்.

அடிப்பவன் ஏதாவது சொல்லுவான். இவனும் தர்ம நியாயமாக ஏதேனும் கூறுவான். சமாதானம் பண்ணி விட்டுத்தான் போவான்.

இந்த ராத்திரியிலோ...

வீராசாமி வெட்டரிவாளைத் துரக்கிக் கொண்டு பாய, அவன் மனைவி பேச்சி பயந்து அலறிக் கொண்டு வெளியே பாய்ந்தாள். “அய்யோ பாவி கொல்ல வாறானே! வெட்ட வாறானே” என்று தெருவில் ஒடினாள்.

அப்போது தான் முத்துமாலை அந்தத் தெருவில் வந்தான். அவன் குறுக்கே பாய்ந்த பேச்சி “அண்ணாச்சி, அண்ணாச்சி! என்னைக் காப்பாத்து...அந்தப் பாழறுவான் அரிவாளைத் தூக்கிக்கிட்டு வெட்ட வாறான்” என்று புலம்பினாள்.

“உங்களுக்கு வேறே வேலையில்லே! இதே கூத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/149&oldid=1140270" இலிருந்து மீள்விக்கப்பட்டது