பக்கம்:இருட்டு ராஜா.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்127

 நீலா அழுது கொண்டே நின்றாள். மூக்கனுக்கு ஒன்றும் ஒடவில்லை.

அது ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறமாக இருந்ததால், வேடிக்கை பார்க்கும் கும்பல் கூடவில்லை.

அண்ணன்காரன் பேசவேண்டியதை எல்லாம். பேசட்டும் என்று காத்துக் கொண்டிருந்த முத்துமாலை ஒரு அளவு வந்ததும் இவ்வளவு போதும் என்று எண்ணியவனாய் குறுக்கிட்டான்.

“சரி துரை, நடந்தது நடந்துபோச்சு. அதுக்காக அலட்டிக் கிட்டிருப்பது வீண் வேலை. இனிமேலே நடக்க வேண்டியதைப் பற்றி யோசித்து ஒரு முடிவுக்கு வருவது தான் விவேகம்” என்றான். தொடர்ந்து “அம்மா நீலா, வீட்டைத் துறந்து, யாவரையும் உதறி விட்டு வந்தாச்சு, அடுத்தாப்லே என்ன செய்றதா உத்தேசம்” என்று நீலாவை நோக்கினான்.

அவள் வாயை திறக்காமல் நிற்கவும், மூக்கனை பார்த்துக் கேட்டான் “நீ ஏதாவது பிளான்வெச்சிட்டு தானே இவளை கூட்டிக்கிட்டு வந்திருப்பே? இனி ரெண்டு பேரும் என்ன பண்ணப் போறீங்க? எந்த ஊாிலே வாழ்க்கை நடத்தப் போறீங்க?”

மூக்கன் மாற்றி மாற்றி ஒவ்வொரு முகமாகப் பார்த்தான். “அதைப் பத்தி எல்லாம் இன்னும் தீா்னானிக்லே” என்றான்.

“அதுதான் தப்பு.ஒரு பெண்ணை இழுத்துக்கிட்டு ஓடிப்போறதை விடப் பெரிய தப்பு, தன்னை நம்பி, தன் கூட வந்தவளுடைய எதிர்காலத்தைப் பற்றி எண்ணிப் பார்க்காமல் அவ வாழ்க்கைக்கு உறுதி—அளிக்காமல்—அவளை அந்தரத்திலே விட்டு விடுவது. நீலா உன் பேச்சைக் கேட்டு, உன்னை நம்பி, உன் மேலே ஆசை வச்சு, உன் கூட வந்திட்டா, அவளைக் கடைசிவரை வைச்சுக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/129&oldid=1140057" இலிருந்து மீள்விக்கப்பட்டது