பக்கம்:இருட்டு ராஜா.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120இருட்டு ராஜா


“பல்லு விளக்குங்க. காப்பி சாப்பிட்டுட்டுப் போகலாம்” என்று தனபாக்கியம் கூறவும், காப்பி போட்டிருக்கியா என்ன?” என்று முத்துமாலை கேட்டான்.

“இதோ அஞ்சு நிமிசத்திலே ரெடியாயிரும்” என்று அடுக்களைப் பக்கம் திரும்பினாள் அவள்.

“வேண்டாம் பாக்கியம். அதுக்கெல்லாம் நேரம் இல்லே” என்று சொல்லிவிட்டு வெளியேறினான் முத்துமாலை.

ராமதுரை அவன் பின்னாலேயே நடந்தான்.

அவர்களது ‘நல்லகாலம்’ பஸ்ஸுக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதே போல டவுன் பஸ் நிலையத்திலும் சந்தர்ப்பம் அவர்களுக்கு உதவியது.

அவர்கள் வந்த பஸ் நிலையத்தினுள் புகுந்த வேளையில், திருச்செந்துார் செல்கிற பஸ் வெளியேவந்து கொண்டிருந்தது. மெதுவாகத்தான் வெளியேறியது. தற்செயலாக அந்த பஸ்சினுள் முத்துமாலையின் பார்வை பாய்ந்தது. அதனுள் மூக்கன் இருப்பது தெரிந்தது. “ஏ துரை அந்த பஸ்சிலே மூக்கன் பய இருக்கானே” என்றான் அவன்.

ராமதுரையும் கவனித்தான். “பொம்பிள்ளைகள் பக்கத்திலே நீலா மாதிரி ஒருத்தி இருப்பது தெரியுது. அந்த மூதியாத்தான் இருக்கும். இப்ப நாம என்ன செய்யலாம்” என்று பதட்டல் காட்டினான் அவன்.

முத்துமாலை அவன் கையைப் பற்றினான். “அவசரப்படாதே. அவங்க நம்மைப் பார்க்கலே. அதனாலே பயமில்லை. இடைவழியிலே எங்கேயும் இறங்கிட மாட்டாங்க. நேரே திருச்செந்துாருக்குத்தான் போவாங்க. நாம அடுத்த பஸ்சிலே போவோம். அங்கே யாரும் அவங்களைத் தேடி வருவாங்க என்கிற எண்ணமே அவங்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/122&oldid=1140043" இலிருந்து மீள்விக்கப்பட்டது