பக்கம்:இருட்டு ராஜா.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124இருட்டு ராஜா

 கல்யாணம் பண்ணி வைக்கத் திராணியில்லாமல் இருக்கான்னு புறம் பேசு தானுக, நீலா மரம் மாதிரி வளர்ந்திட்டா—குதிரு மாதிரி வளர்ந்து நிக்கறா—இருபத்து நாலு இருபத்தஞ்சு வயசாகியும் கல்யாணமாக வழியில்லே என்று பொம்பிளைகளும் ஆம்பிளைகளும் பேசுறாங்க பழிக்கிறாங்க. யாராவது உதவி செய்ய முன் வந்தாங்களா?”

“இருந்தாலும் மூக்கன் ஆசாரிப் பையன்...”

“நாம பத்தரைமாத்து சைவப் பிள்ளைமாராச்சேன்னு மனசு கெடந்து அடிச்சுக்கிடு தாக்கும்? ஏ, துரை இதில் எல்லாம் அர்த்தமே கிடையாது. பணமும் சொத்தும் இருக்கவங்க பெருமை கொழிச்சுக்கிடலாம். அதிலே அவங்க மதிப்பை காணலாம். அதைவிட்டுத் தள்ளு. ஊர் சிரிக்குமே, கேலி பேசுமேன்கிறதும் பெரிய விசயம் இல்லே. சிரிச்சால் சிரிச்சிட்டுப் போட்டுமே. கொஞ்ச காலத்துக்குச் சிரிக்கும். அப்புறம் மறந்து விடும். இல்லாட்டி அதுக்கு எண்ணியும் பேசியும் சிரிக்கதுக்கு வேறே புது விசயம் வந்துடும்!” என்றான் முத்துமாலை.

ராமதுரை பேசாமல் வெளியே பார்த்தபடி இருந்தான்.

“ஊர்க்காரங்க சிரிப்பும் சொந்தக்காரங்க பழிப்பும் பணம் நிறைய வச்சிருக்கிறவங்களை எதுவும் செய்வதில்லே. அதே மாதிரி இல்லாதவங்களையும் ஒண்ணும் பண்ணுவதில்லை. மத்தியதரங்களைத்தான் அது பாடாப்படுத்தும். பெரிய பண்ணை புன்னைவளம் பிள்ளை மகள் ரஞ்சிதம், முதலிப் பையன் ஒருவன் கூடப் போயிட்டா. அவங்க ரெண்டு பேரும் புருஷன் பெண் சாதியா நம்ம ஊருக்கு திரும்பி வந்தாங்க. யாரு என்ன பண்ண முடிஞ்சுது அவங்களை? இப்பவும் ஊரோடு ஜம்னு தான் இருக்காங்க. கூலி வேலை செய்து பிழைக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/126&oldid=1140048" இலிருந்து மீள்விக்கப்பட்டது