பக்கம்:இருட்டு ராஜா.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108இருட்டு ராஜா

 இருட்டில் அவன் மறைகிற வரை, அவன் போவதையே பார்த்துக்கொண்டு நின்றான் தங்கராசு. அவனுள்ளும் ஏதோ ஒரு குழப்பம், தெளிவில்லாத ஒரு வேதனை, சூழ்ந்து கனப்பதை உணர்ந்தான்.நெடுமூச்சியிர்த்தான்.

முத்துமாலைக்கு “மனசு சரியில்லை” என்ற நோய் பற்றிக் கொண்டது எதிலும் சலிப்பும் வெறுப்பும், எதுவுமே பிடிக்கவில்லை, ஒன்றுகூட அவனுக்கு திருப்தி அளிக்கக் கூடியதாகத் தோன்றவில்லை.

அந்த ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்காரர்களையும் அவர்களது வாழ்க்கை முறைகளையும் அவன் எண்ணாத நேரமில்லை. அப்படி எண்ணிப் பார்க்கிறபோது, அவனுடைய மனம் மேலும் மேலும் குழம்பித் தவித்தது. ஏன் மனிதர்களுடைய வாழ்க்கை இப்படி இருக்கிறது? எதற்காக எல்லோரும் இவ்வாறு கஷ்டப்பட நேரிடுகிறது என்ற ரீதியில், விடை கிடைக்காத கேள்விகள் அவன் உள்ளத்தில் அலைமோதிக் கொண்டிருந்தன.

ரொம்பப் பேர் சாப்பாட்டுக்கும் அவசியமான செலவுகளுக்கும் பணம் இல்லாமல் தவிக்கிறார்கள். காசு காசாக எண்ணி எண்ணிச் செலவு செய்ய வேண்டிய நிலையில் திண்டாடுகிறார்கள். அதே வேளையில் நாறும் பூநாதனைப் போன்றவர்கள் நூறு ரூபாய் நோட்டுடன் அலட்சியமாக செலவு பண்ண முடிகிறதே! ஐநூறு ரூபாய் கொடுக்க வேண்டும் என்று சொன்னதுமே, அவன் அஞ்சு நோட்டுக்களை உடனே எடுத்துக் கொடுக்க முடிந்ததே! என்ன திமிர், எவ்வளவு அலட்சியம்...

இந்த நினைப்பு முத்துமாலையை ஓயாது அலைக் கழித்தது.

அந்த இடத்திலிருந்து கிளம்பிப் போனவன் எங்கே போனானோ என்ன செய்தானோ என்றும் நினைக்காமல் இருக்க முடியவில்லை அவனால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/110&oldid=1139583" இலிருந்து மீள்விக்கப்பட்டது