பக்கம்:இருட்டு ராஜா.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்111

 ருக்கு அதிசயமாகப்பட்டது. அப்புறம் கசமுச என்று பேச்சு பரவியது.

மாப்பிள்ளையோடு சண்டை போட்டுக் கொண்டு அவள் வந்துவிட்டாள் என்று சிலர் சொன்னார்கள். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள்தான் சண்டை பிடித்து அவளை விரட்டிவிட்டார்கள் என்று வேறு சிலர் சொன்னார்கள்.

“மாமியார்க்காரி சரியான தாடகை, மாப்பிள்ளை அம்மா சொல்லை கேட்டு நடக்கிற அப்பிராணி. இரண்டு பேரும் சேர்ந்து இந்தப் பெண்ணை பாடாய்படுத்தியிருக்காங்க. இதுதான் என்ன செய்யும், பாவம், ஊரைப் பார்த்து வந்திட்டுது” என்று ஒரு பெரியம்மா ஒலி பரப்பினாள்.

அதில் உண்மை இருந்தது என்பதை அணைந்த பெருமாள் பிள்ளையைக் கண்டு பேசியவர்கள் உணர்ந்தார்கள். மாமியார் இசக்கி அம்மாள் சரியான காளியாகத்தான் இருந்தாள் என்று தெரிந்தது. எடுத்ததுக் கெல்லாம் மருமகளை குறை கூறினாள்.வசை பாடினாள். அவளைப் பெற்றவளையும், பெண்ணை வளர்த்து விட்டிருக்கிற லெட்சணத்தையும் பழித்துப் பேசினாள். ஆரம்பத்தில் “உன்னை விறகுக்கட்டையாலே அடிச்சா என்ன? விளக்குமாத்தாலே ரெண்டு போடு போட்டா என்ன?” என்று வாயினால் கொடை கொடுத்தவள், பிறகு கையில் கிடைத்ததைக் கொண்டு அந்தப் பெண்ணுக்கு “பூசைக் காப்பு” கொடுக்கத் துணிந்தாள்.

“கூறுகெட்ட கோப்புரம்! ஒரு எழவு வேலையும் தெரியலே. நல்லபடியா, வாய்க்கு ருசியா ஆக்கி வைக்கக் கூடத் தெரியாத பொம்பிளை.என்ன பொம்பிளை எங்க தலையிலே கொண்டாந்து கட்டிட்டாங்க இந்த முண்டத்தை.. சதிர்தாசி மாதிரி சிங்காரிச்சுக்கிட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/113&oldid=1139787" இலிருந்து மீள்விக்கப்பட்டது