உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்வுக்கலங்கள்‌ 49

படுகின்றனர் என்றும் கணித்துள்ளார்கள். இத் தகைய பெரும்பான்மையான வல்லுநரின் தேவை களைச் சரிசெய்யத் தனிப்பட்ட முறையில், பல்கலைக் கழகங்களிலிருந்து அனுப்பப்படும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும், அப்பல்கலைக் கழகங்களுக்கு எவ் விதச் செலவுமின்றித் தனிப்பட்ட முறையில் தேசியப் பெருங்கடல் ஆய்வு நிறுவனம், கவேஷனி என்ற ஆய்வக்கலத்தில் ஆண்டுதோறும் ஓரிரு ஆய்வுப் பயணத்தை மேற்கொள்ளச் மேற்கொள்ளச் செய்து தொடர்ந்து பயிற்சியளித்துக் கடலாய்வுப் பணிக்கான வல்லுநர் களைப் பெருக்கி வருகிறது. ஆய்வுக்கலம் செலுத்தல். ஆய்வுக்கலம் செலுத்து வதற்குத் தேவையான வல்லுநர்கள், உதவியாளர்கள், மாலுமிகள், முதலியோரை ஆய்வுக்கழகங்கள் தனித் தனியே வேலையில் அமர்த்தி, ஆய்வுக்கலங்களை தனித் மேலாள்வது ஓர் இக்கட்டான காரியமாகும். முக்கிய மாக ஆய்வுக்கலங்கள் துறை முகத்தினுள் நுழைவதற் கும், அவற்றினின்று வெளியேறுவதற்கும் ஆங்காங்கே உள்ள உள்நாட்டு, வெளிநாட்டுத்துறை முகங்களில் அவற்றிற்கான கண்காணிப்பாளர்களைத் தனியே அமர்த்திச் செயல்படுத்தி ஆய்வுப் பயணத் திற்கான திட்டம் வகுத்தலில் பொறுப்பேற்றுள்ள வல்லு நர்களையே நாடுவது, அவர்கள் அப்பணிக்கா கச்செலவிடும் நேரத்தை மிகவும் வீணாக்கக் கூடும். எனவே நமது நாட்டில் தற்பொழுது சரக்குக் கலங் களை நிர்வகித்து வரும் இந்திய வணிகக் கப்பல் கழகத்தினிடம் (Shipping Corporation of India) ஆய்வுக்கலங்களைச் செலுத்தும் பொறுப்புக் கொடுக் கப்பட்டுள்ளது. இருப்பினும, கலங்களில் செல்லும் அறிவியல் வல்லுநர்களையும், கலம் செலுத்திடும் கப்பல் கழகத்தின் வல்லுநர்களையும் ஒருங்கிணைத்து ஆய்வுகளை நிறைவேற்றுவதில் ஆங்காங்கே சற்றுத் தடை ஏற்படுத்துவதைக் காண நேர்ந்தது. எனவே குறுகிய காலத்திட்ட ஆய்வுப்பணிகள் (எடுத்துக் காட்டாக இந்தியப் பெருங்கடலில் மங்கனிசு கனிம முடிச்சுக்களின் இருப்புக் கணிப்பு) வாடகை உடன் படிக்கையில் அமர்த்தப்பட்ட கலங்களின் மூலமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இது ஆய்வுப் பணிகளைத் திட்டமிட்டுச் செயலபடுத்தும் அறிவியல் வல்லுநர் மிகவும் எளிதாகவும், தங்களுடைய ஆய்வு களைத் திட்டமிட்டபடி நிறைவேற்றவும், வேறு வேலையினின்று ஈடுபாடு அகற்றிச் செயல்படவும் மிகவும் உதவியாக இருக்கிறது. இம்முறையே கடற்பகுதியில் எண்ணெய்க் கண்டுபிடிப்பினை விரைவுபடுத்த எண்ணெய் மற்றும் இயற்கை வளிம ஆணையத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை நமது நாட்டில் ஆய்வுக்கலங்கள் பெருகு மாயின் எல்லா ஆய்வுக்கலங்களையும் ஏற்றுச் செலுத் துவதற்கென ஒரு தனி நிறுவனத்தையே ஏற்படுத்திக் கொள்ளலாம். ஆய்வுப் பயணங்களைக் கண்காணித்தல். ஆய்வுப் அ. க. 3-4. ஆய்வுக்கலங்கள் 49 பயணத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் இரு தடைகள் ஏற்படலாம். ஆய்வுக் கலங்களைச் செலுத்துபவர் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட தொலைவுக்கு ஓட்டிச் செல்ல முடியாதபடி தாமதம் ஏற்படலாம். அப்படி ஏற்படுமாயின் அதற்குரிய காரணத்தைக் கண்டு உடனடியாகச் சரிசெய்து செயல்பட வேண்டும். சிற்சில சமயங்களில் துறை முகங்களிலுள்ள நீரையும் உணவுப் பொருள்களையும் வரவழைப்பதிலும், கலத்திலுள்ள எந்திரம், கருவி கள் முதலியவற்றைச் செப்பனிட்டு அவற்றிற்குரிய மாற்று உறுப்புகளை (spares) உடனடியாகக் கொணர இயலாமையிலும் தாமதம் நேரிடலாம். 4 வ மேலும் ஆய்வுக்கலங்களில் பொருத்தப்பட்டுள்ள நவீன கருவிகளில் கோளாறு ஏற்படுமாயின், சேர்க் கப்பட வேண்டிய அறிவியல் நுட்பச் செய்திகளைத் திட்டமிட்டபடிப் பெறமுடியாத அத்தருணங்களில் கப்பலிலேயே அவற்றைச் செப்பனிடும் வல்லுநர் களை வைத்து உடனடியாகச் செப்பனிட்டு இயக்க வேண்டும். அல்லது துறைமுகம் வந்து அடைந்தவுடன் அவற்றிற்கான வல்லுநர்களை உடனடியாகக் கலங் களுக்கு அழைத்துச்சென்று அக்கருவிகளைச் சீராக்க வேண்டும். ஆய்வுப்பயணத்தின் பொழுது நடந்த ஆய்வுகளின் விளக்கங்களை அன்றாடச் செய்திகளில் கொடுக்கவும், கலங்களில் உள்ள கருவிகளில் ஏற் படும் கோளாறுகளைக் கரையிலுள்ள வல்லுநர் களைக் கொண்டு செப்பனிட வேண்டிய கருத்து களைப் பெறவும் ஆய்வுக்கலங்களில் மிகவும் திறமை வாய்ந்த செய்திப்பரப்புக் கருவி (communications system) பொருத்தப்பட்டிருக்க வேண்டும். சிறிய ஆய்வுக்கலங்கள். கடற்கரையோரப்பகுதி களில்காணப்படும் கனக்கனிமங்களின் கணிப்பிற்கும், கண்ணக மணல் (calcareous sand) இருப்புக் கணிப் பிற்கும், எண்ணெய் கொண்ரும் குழாய்ப்பதிப்பிற் கும், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்பட வேண்டியகழிவு நீர்களைக் கடத்தும் குழாய்ப் பதிப் பிற்கும், சிறிய ஆய்வுக்கலங்களை அல்லது படகு களைத் திறமையாகப் பயன்படுத்த முடிகிறது. இத் தகைய ஆய்வுகளை, ஆங்காங்கே கிடைக்கும் எந் திரம் பூட்டிய மீன்பிடிக்கும் படகுகளை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு விரைவில் நிறைவேற்றிட எண் ணற்ற வாய்ப்புக்கள் உண்டு. இவ்வகை ஆய்வுகள் நடத்தும்போது ஆய்வுக்கான கருவிகளைத் தற்காலிக மாகக் கிடத்தி இருக்கும் முறையினைப் படத்தில் காணலாம். இம்முறையில் பல நன்மைகள் உண்டு. அளவாய்வு செய்ய வேண்டிய பகுதிகளில் உள்ள விசைப் படகுகளை, ஆய்விற்குத் தேவையான குறுகிய காலத்திற்கு வாடகைக்கு அமர்த்துவதால், அப்படகு களில் உள்ள ஊழியர்கள் ஆய்வு நடத்தவேண்டிய கடலோரப்பகுதிகளில் படகுசெலுத்துவதற்கான வழி முறைகளைத் தெரிந்து வைத்திருப்பார்கள். மேலும் படகு செலுத்துவதில் ஏற்படும் எந்திரக் கோளாறு .