உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 ஆயமுறைகள்‌, நிலக்கோள

52 ஆயமுறைகள், நிலக்கோன R1 N S Q₁ .P3 படம் 1. நிலக்கோன ஆயமுறை அச்சாகப் பயன்படுத்துகிறோம். வட, தென் துருவங் களை இணைக்கும் இவ்வச்சு NOS எனப் படத்தில் குறிக்கப்பட்டுள்ளது. கோளத்தின் அச்சுக்குச் செங்குத்தாக வெட்டு முகம் இருக்குமாறு கோளம் வெட்டப்படுகிறது. இத் தகைய வெட்டுமுகம் ஒரு வட்டமாக இருப்பதுடன், இதன் மையமும் கோளத்தின் அச்சின் மீதே அமைந் திருக்கும். இத்தகைய வெட்டுமுகங்களில் 0, என்ற புள்ளியை மையமாகக் கொண்ட வட்டத்தினை எடுத்துக் கொள்ளலாம். R1 100. 01 படம் 2. நிலக்கோளக் கிடைவட்டம் P₁ இவ்வட்டத்தின் மீதுள்ள புள்ளிகள் யாவும் கோளத்தின் புறப்பரப்பின் மீதுள்ள புள்ளிகளே. வெட்டு முகத்தளம் ஒரு கிடைத்தளமாக அமையும். இத்தகைய கிடை வட்டங்களில், கோளத்தின் மையத் தைத் தனது மையமாகக் கொண்ட வட்டமே மிகப் பெரியது. இது கோளத்தின் மேல் கீழ்ப்பாதிகளுக்கு நடுவில் அமைந்து கோளத்தின் இரு சமமான பாதி களுக்கும் பொது வரம்பாக விளங்குவதால் ஆய முறையின் மற்றொரு கூறாக இவ்வட்டம் கொள்ளப் படுகிறது. இது நில நடுவரை (equator) எனப் படும். நில நடுவரை முன்னர் பூமத்திய ரேகை என வழங்கப்பட்டது. இந்நடுவரையில் அமைந்திருக்கும் தளம் நிலநடுத்தளம் (equatorial plane) எனப்படும். 0 என்ற அச்சுப் புள்ளியை மையமாகக் கொண்ட கிடை வட்டத்தின் மீது P,,Q, R, ஆகிய புள்ளிகள் உள்ளன. இவற்றுள் எப்புள்ளியைக் கோளத்தின் மையத்துடன் சேர்த்தாலும், சேர்க் கும் கோடுகளுக்கும் (OP1,001.OR, முதலியன) கிடைத்தளத்திற்கும் இடையேயுள்ள கோணத்தை ஆய அளவீடாகக் கொள்ளலாம். இவ்வளவீடு ஓ என்ற கிரேக்க எழுத்தால் குறிக்கப்படுகிறது. இத னைத் தற்போது அகலாங்கு (latitude) என்பர். இதுவே முன்னர் அட்சரேகை என வழங்கப்பட்டது. 01ஐ மையமாகக் கொண்ட வட்டம், நடுவரைக்கு அணையான கிடைவட்டமாகும். இது 20° அகலாங்கு எனில், இவ்வட்டத்தின் மீதுள்ள எப்புள்ளியைக் கோளத்தின் மையத்துடன் இணைத்தாலும், இணைக் கும் கோடு, நடுத்தளத்துக்கு 20° சாய்வில் இருக்கும் என்பது பொருள். இவ்வாறே ஒவ்வொரு அகலாங் கும் கோண அளவீடுகளால் வரையறுக்கப்படுகிறது. அகலாங்கு எனக் கோண அளவால் குறிப்பிடப் படுவது, புவிப்பரப்பில் அமைகின்ற ஒரு வட்டமான கற்பனைக் கோடே ஆகும். அகலாங்கின் புள்ளியைக் கோள மையத்துடன் இணைக்கும் கோட்டின் சாய்வு, மேல் நோக்கியதாக இருப்பின் (அதாவது, வடக்கு நோக்கி) கிடைக் கோணங்களை நேர்க்கோணங்களாகவும் (p) கீழ் நோக்கியதாக இருப்பின் (அதாவது, தெற்கு நோக்கி) எதிர்க் கோணங்களாகவும் (-p) கொள்ளலாம். நிலக் கோளத்தின் அச்சில் ON வடதிசையையும், OS தென்திசையையும் குறிப்பிடுவதால் அகலாங்கு களும் இவற்றையொட்டி 20° வடக்கு (20°N) என்பது போன்று குறிப்பிடப்படுகின்றன. இவ் வாறு வரையப்பட்ட அகலாங்குத் தொகுதிகள் படம் 3 இல் காட்டப்பட்டுள்ளன. படம் 1 இலிருந்து கிடைக்கோணம் இன் அளவு 90° வடக்கு உச்ச எல்லையாகவும், 90° தெற்கு மறு எல்லையாகவும் கொண்டு விளங்கும் எனக் காணலாம். எனவே, நிலக்கோளப்பரப்பின் மீது விளங்கும் ஒரு புள்ளி (ஓரிடம்) எந்தக் கிடைக்கோட்டின் மீது அமைந் குறிப்பிடுவதன் துள்ளது என்பதைக் அப்புள்ளியின் ஆயங்களில் ஒன்று வரையறுக்கப்படுகிறது. இனி, புள்ளியை முற்றாக வாயிலாக (அகலாங்கு) வரையறுக்கத்