உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிசலம்1

அரிசலம்' (அரிசயம்!) பெ. கொன்றை. (முன்.) அரிசலம்' (அரிசயம்2) பெ. எலுமிச்சை. (முன்.)

அரிசனக்குடியிருப்பு பெ. (இக்.) அரிசன மக்களுக்கு அரசால் கட்டிக் கொடுக்கப்பெற்ற வீட்டுவரிசை. (நாட். வ.)

அரிசனம்1. பெ. மஞ்சள். அங்கவர் அரிசனம் அழித்த சேற்றினும் (சூளா. 367). அரிசனமும் குங்குமமும் அரைத்தமைப்பார் (பெரியபு. 28, 332). அரிசனம் பூசி மாலை அணிந்து (சி. சி. சுப. 185). அரிசன மும் நீறும் உடன்கூட (தத்து. பிர. 180). அரிசன மேனி நல்லாள் (கந்தபு. 5, 2, 87). சொற்கத்து மல்கும் அரிசனத்து வண்ணம் (திருக்கழுக். உலா 61). அரிசன வாடைச் சேர்வை குளித்து (திருப்பு. 55). அரிசனம் மாலை சாந்தம் அணிந்து (அகோர.

வேதார. பு. விசு. 33).

அரிசனம்' பெ. இறைவன் (திருமால்) மக்களென்று காந்தியடிகள் குறிப்பிட்ட குலம். அரிசனங்கட்கு. அருந்துணையாகி (காந்திகாதை, 5, 2, 77).

அரிசா பெ.

பெருங்குமிழ். (வைத். விரி. அக. ப. 22)

அரிசாரணம் பெ. மாவிலிங்கம். (பரி. அக./செ.ப. அக.

அனு.)

60, 6).

அரிசா வீரா பெ. பெருங்குமிழ்மரம். (வாகட அக.) அரிசி பெ. நெல் முதலியவற்றின் உமி நீங்கிய மணி. புகரவை அரிசிப் பொம்மற் பெருஞ்சோறு (நற். பொன்னறைந்தன்ன நுண்ணேர் அரிசி (மலைபடு. 440). யாம்சில அரிசி வேண்டினமாக (புறநா. 140, 5). இம்மி அரிசித் துணையானும் (நாலடி. 94). சாலி அரிசி (சிலப். 16, 27). நெல்லும் பொரியும் சில்பலி அரிசியும் (மணிமே. 6, 95).தளை யுலை வெந்த வளைவாலரிசி (பெருங். 1,40,133). செந்நெல் அரிசி சிறுபருப்பு (பெரியாழ். தி. 2, 9, 7). வரகரிசிச் சோறும் (தமிழ்நா. 22). பானையிலே பத்தரிசி இல்லை (நாஞ். மரு.மான். 9, 163).

அரிசி' பெ. வெப்பால் அரிசி, விளாவரிசி, ஏலஅரிசி, கார்கோல் அரிசி, உழுவாலரிசி, கோரம்பாலரிசி ஆக

அரிசி ஆறு. (வாகட அக.)

அரிசி 3 பெ. வாகை முதலிய நெற்றின் விதை. வால் நெற்று அரிசி ஆர்ப்ப (குறுந்.369).

...

அரிசி பெ.

மஞ்சள். (செ.ப.அக.அனு.)

35

0

அரிசிதூணி

அரிசி பெ. கடுக்காய். (முன்.)

அரிசி' பெ. விந்து. துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசி (திருமந். 193).

அரிசிக்கணக்கு பெ. ஒன்றனைப் பற்றிக் கேட்பவருக்கு உமக்கு அது சம்பந்தமில்லை என்பதைக் குறிக்கும்

சொல். (வட். வ.)

அரிசிக்கம்பு பெ. சித்திரையில் விதைத்து ஆடியில் அறுவடையாகும் கம்புப் பயிர்வகை. (வட். வ.)

அரிசிக்காகம் பெ. சிறிய இனக்காகம். (இலங். வ.)

அரிசிக்காடி பெ. புளித்த கஞ்சி. (பே.வ.)

அரிசிக்காணம் பெ. பழைய - வரிவகை.

பொன்வரி

பச்சைபணம் அரிசிக் காணம் நற்பசு நல் எருது நல் எருமை (தெ.இ.க. 8,349).

அரிசிக்குழை பெ. ஒரு களைப்பயிர். (ரா. வட். அக.)

அரிசிக்கோதுமை பெ. வாற்கோதுமை. (செ. ப.அக.அனு.)

அரிசிகளை-தல் 4 வி. அரிசியில் நீர்விட்டு உமி முதலி யன நீக்கிச் சுத்தம் செய்தல். (நாட்.வ.)

அரிசிச்சாதம் பெ. 1. அரிசியைச் சமைத்துண்டாக்கிய சோறு. (பே.வ.) 2. நன்கு வேகாது அரிசி அரிசியாக இருக்கும் சோறு. (முன்.)

அரிசிச்சாராயம் பெ. அரிசியினின்று எடுக்கும் சாராய

வகை. (செ. ப. அக.)

அரிசிச்சோளம் பெ. பெரியசோள வகை. (நாட். வ.)

அரிசித்தரி பெ. அரிச்சுவடி. அஞ்சு வயசிலே அரிசித்தரி படிச்சேனம்மா (மலைய, ப. 252).

அரிசித்திப்பிலி பெ. திப்பிலி. (பே.வ.)

அரிசித்தினை பெ. தினைவகை. (நாட், வ.)

...

அரிசித்துண்டம் பெ. பெ. பழைய வரிவகை. (சென்னை கல். அறி.110, 1917)

அரிசி தூணி பெ. வரிவகை. அரிசி தூணி நிலத்திறப் புக்கடமை செக்கு கடமை ... அனைத்து வரிகளும்

(தெ.இ.க.12,202).