உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கன்னி

71 கன்னி கன்னி இராசிச் சக்கரத்தில் (zodiac) ஆறாம் விண்மீன் குழு வாகச் சிம்ம இராசிக்கும் துலா இராசிக்கும் இடையே கன்னி (virgo) விண்மீன் குழு அமைந்துள்ளது. இவ் விண்மீன் குழு மிகப்பெரிய இரண்டாம் விண்மீன் குழு ஆகும். ஜோதிடவியலில், ஆகஸ்ட் 23-செப்டம் பர் 82 வரை உள்ள இடைப்பட்ட நாளில் பிறந் தோருக்கு இந்த இராசியைப் பயன்படுத்துகின்றனர். தொடக்க காலத்தில் டாலமியால் வெளிக்கொணரப் பட்ட அல்மாகெஸ்ட் என்னும் நூலில் இவ்விண்மீன் குழுவைப் பற்றிய குறிப்பு உள்ளது. தன் கன்னி விண்மீன்குழுவின் வல ஏற்றம் (right ascension) 13 மணி, நடுவரை விலக்கம் (declination) 2. தெற்கு ஆகும். இக்குழுவில் சித்திரை விண்மீன் எனப்படும் - வர்ஜினிஸ் விண்மீன் உள்ளது. ஒளித்தரம் ஒன்று ஆகும். மேலும் பூர்ணிமா எனப் படும் - வர்ஜினிஸ் உள்பட மூன்றாம் ஒளித்தர விண் மீன்கள் மூன்று இக்குழுவில் உள்ளன. பூர்ணிமா விண்மீன் ஓர் இரும விண்மீன் ஆகும். இது புவியிலி ருந்து 32 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந் துள்ளது. கன்னி விண்மீன்குழுவில் ஏறத்தாழ 160 விண் மீன்களை எளிதாகக் காணலாம். மேலும் இக்குழு வில் ஆயிரக்கணக்கான மண்டலங்களும் (galaxies) மண்டல முடிச்சுகளும் (clusters of galaxy) உள்ளன. ஒவ்வொன்றும் 40 - 250 மண்டலங்களைக் கொண்ட முடி ச்சுகளாக 140 முடிச்சுகள் உள்ளன. இக்குழு வானக்கோளத்தில் 1294.4 சதுரப் பாகை டத்தை நிரப்பிக் கொண்டுள்ளது. பெ.வடிவேல் கன்னி இனப்பெருக்கம் (தாவரவியல்] தாவரங்கள் இலைப்பருவத்திலிருந்து இனப்பெருக்க நிலைக்கு மாறும்போது பல மாற்றங்கள் நிகழ்கின் றன. பூ மூலத்திசுக்கள் (floral primordia) வளர்ந்து பூவாகின்றன. பூவின் பல பகுதிகள் வளரப் பூக்கள் பக்குவம் அடைகின்றன. இதைத் தொடர்ந்து மகரந் தச் சேர்க்கையும், கருவுறுதலும் நிகழ்ந்து பின்பு கரு வளர்ச்சி அடைந்து கனி விதை ஆகியவை உண்டா கும். பொதுவாகக் கருவுறுதலின்போது மகரந்தக் குழாயில் உள்ள இரண்டு மகரந்தக் கருக்களில் ஒன்று பெண் பாலினச் செல்லுடன் (egg) சேர்ந்து விதைக் சுருவாகவும், மற்றொன்று இரண்டு மைய உட்கருக் களுடன் சேர்ந்து விதையில் உணவைச் சேமிக்கும் முளைசூழ்தசை (endosperm) என்னும் அமைப்பாகவும் மாறுகின்றன. சில தாவரங்களில் கருவுறுதல் நடை பெறாமலேயே விதை உண்டாகிறது. இச்செயலுக்குக் கன்னி இனப்பெருக்கம் (parthenogenesis) என்று பெயர். இது மங்குஸ்தான் என்னும் பழப்பயிரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில தாவரங்களில் இச் செயலுக்கு நேர்மாறான நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. கருவுறுதல் நிகழ்ந்தாலும் விதை தோன்றுவதில்லை (parthenocarpy). இது கொய்யா, திராட்சை, தக்காளி போன்ற பழப் பயிர்களில் காணப்படுகிறது. " கன்னி இனப்பெருக்கம். ஆராய்ச்சியாளர்கள் முதன் முதலாக மங்குஸ்தான் என்னும் வெப்ப மண்டலப் பயிரில் இதைக் கண்டுபிடித்தனர். இதன் தாவரப் பெயர் கார்சீனியா மங்குஸ்தானா (Garcinia mangustana) என்பதாகும். இது கார்சீனியேசி குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஏறத்தாழ 10 மீட்டர் உயரம் வளரக்கூடிய மரமாகும். இப்பழம் மிகுந்த சுவை உடையது. மேற்கு இந்தியத் தீவுகளிலும், அமெரிக்காவிலும் மிகுதியாகப் பயிர் செய்யப்படு கிறது. தமிழ்நாட்டில் நிலகிரி மலையிலும் குற்றால மலையிலும் பயிராகிறது. இப்பழம் மிகுதியான வைட்டமின் நிறைந்தது; மணமுடையது. மங்குஸ்தான் பயிரில் பூக்கள் நன்றாகப் பூத்த வுடன் சூலகமும் மகரந்தமும் முதிர்ந்து பக்குவ நிலையை அடைகின்றன. மகரந்தம் சூல்முடியை அடைகிறது. இச்செயலுக்கு மகரந்தச் சேர்க்கை என்று பெயர். சூலகமுடியில் போரான், அமினோ அமிலங்கள், சர்க்கரை போன்ற சத்துகள் பெருமள வில் உள்ளன. மகரந்தத்தூள் இச்சத்தை உறிஞ்சிக் கொண்டு வளர்ந்து மகரந்தக் குழாயைத் தோற்று விக்கிறது. சூலகக் கருவில் (ovule nucleus) செல் பிரி தல் ஏற்பட்டுச் சினர்ஜிட்ஸ் (synergids), துருவ உட் கரு (polar nuclei), மைய உட்கரு (egg) போன்ற அமைப்புகள் தோன்றுகின்றன. வள இந்நிலையில் சூலகம் கருவுறுதலுக்கு ஆயத்த மாக உள்ளது. இச்சமயத்தில் மகரந்தக் குழாயில் உள்ள மகரந்தக் கருவில் செல் பிரிதல் ஏற்பட்டு அது குழாய்க்கரு (tube nucleus), உற்பத்திக்கரு (generating nucleus) எனப் பிரிகிறது. ஆனால் மகரந்தக் குழாய் சூலகத்தின் கருவை நோக்கி ரும் நிலையிலேயே, சூலகத்தில் உள்ள கருக்களில் இரண்டு ஒன்றோடு ஒன்று இணைந்து கருமுட்டை (zygote) தோன்றுகிறது. மகரந்தக் குழாயில் உள்ள கருக்கள் சிதைந்து விடுகின்றன. இச்சமயத்தில் மகரந்தக் குழாயின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு இடை யிலேயே நின்றுவிடுகிறது. ஆய்வாளர்களால் மகரந்தக் குழாயில் உள்ள கருக்களின் நிலையைத் தெளி வாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. .