உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்

131



இணைப்பு 1

களப்பிரர் பற்றிய வாழ்த்துப் பாக்கள் 1

அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா

(தரவு)

கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் தொழுதேத்தக்
கடல்கெழு கனைசுடரிற் கலந்தொளிரும் வாலுளைஇ
அழலவிர் சுழல்செங்கண் அரிமாவாய் மலைந்தானைத்
தாரோடு முடிபிதிரத் தமனியப் பொடிபொங்க
ஆர்புனல் இழிகுருதி அகலிடம் உடனனைப்பக்
கூருகிரான் மார்பிடந்த கொலைமலி தடக்கையோய்!

(தாழிசை)

முரைசதிர் வியன்மதுரை முழுவதூஉம் தலைப்பனிப்பப் புரைதொடித் திரடிண்டோட் போர்மலைந்த - மறமல்லர்
அடியோடு முடியிறுப்புண் டயர்ந்தவன் நிலஞ்சேரப்
பொடியெழ வெங்களத்துப் புடைத்துநின் புகழாமோ?

கவியொலி வியனுலகம் கலந்துட னனிநடுங்க
வலியியல் அவிராழி மாறெதிர்ந்த மருட்கோவும்
மாணாதார் உடம்போடு மறம்பிதிர வெதிர்கலங்கச்
சேணுயர் இருவிசும்பிற் செகுத்ததுநின் சினமாமோ?

படுமணி இனநிரைகள் பரந்துடன் இரிந்தோடக்
கடுமுரண் எதிர்மலைந்த காரொலி எழிலேறு
வெரிநொடு மருப்பொசிய வீழ்த்துதிறல் வேறாக
எருமலி பெருந்தொழுவின் இறுத்ததுநின் இல்லாமோ?

(அம்போதரங்கம்) (பேரெண்)

இலங்கொளி மரகதம் எழில்மிகு வியன்கடல்
வலம்புரித் தடக்கை மாஅல் நின்னிறம்
விரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொனும்
பொருகளி றட்டோய்! புரையும் நின்னுடை