________________
கொள்கிறான். "அடி என்ற வீழ்தல்' சொல் தோற்றவன் சொல் (காலடியில் கட்சியினையும் 'அடிபுறந்தருதல்' என்ற விழவைத்தல்) வென்றவனின் வீரத்தையும் விளங்க வைப்பதனைச் சங்க இலக்கியத்தில் காண்கிறோம். மெல்ல வந்தென் நல்லடி பொருந்தி" (புறம்: பாடல் எண்: 73) "அடிபுறந்தருகுவர் நின் அடங்காதோரே" (புறம்: பாடல் எண்: 35) அரசியல் தவிர்ந்த சமூகத்தின் மற்ற அமைப்புகளில் ஒருவர் மற்றவர் காலடியில் விழுந்து வணங்கியதாக நமக்குச் செய்திகள் சங்க இலக்கியத்தில் கிடைக்கவில்லை. சங்கமருவிய காலத்தில் தமிழ்நாட்டில் மதங்கள் காலூன்றத் தொடங்கின. (சங்க காலத்தில்தான் தமிழ்நாட்டில் வடநாட்டு மதங்களான சமணமும் பௌத்தமும் இறக்குமதியாபின.) தமிழ் நாட்டில் விரைவாகப் பரவத் தொடங்கிய சமண மதம் கடவுட் கோட்பாட்டினை ஏற்றுக் கொள்ளவில்லை. 'வினை நீத்த அறிவர்களான துறவிகளே' அந்த மதத்தில் வழிபாட்டிற்குரிய வராயினர். எனவே துறவிகளின் காலடிகளில் விழுந்து வணங்கும் முறை அம்மதத்தில் உருவாயிற்று. காலடியில் விழுந்து வணங்குவதால் வணக்கமுறையினைக் கருதி வணக்கத்திற்குரிய துறவிகளும், 'அடிகள்' எனப்பட்டனர். சமணத் தீர்த்தங்கரர் களுக்குச் சிலை அமைத்து வழிபடும் முன்னர் இரண்டு காலடிகளை மட்டும் செதுக்கி வழிபடும்முறை நடைமுறையில் இருந்தது சிலைகள் உருவான பின்னரும்கூடச் சில டங்களில் பாதங்களை மட்டும் வடித்து வழிபடும் வழக்கம் தொடர்ந்து வந்தது. சமண மதம் ஆணைவிடப் பெண் தாழ்ந்தவள் எனக் கருதிய மதம். என னவே, 12