பறித்து, திரையிட்டு, நீரைத் தெளித்துச் சிலையை அவசரமாகத் தேய்க்கிறான். கையிலே ஏதேனும் வலியிருப்பின், என்மீது கடிந்துகொள்கிறான், காலால் மிதிக்கிறான், அப்பப்பா இவன் செய்யும் அக்ரமம் கொஞ்சமா!
இரவு வந்ததும், எனக்கென்று பக்தர்கள் தந்த பிரசாதம், இவனுடைய சரசிகளுக்குப்போய்ச் சேருகிறதே! இதோ, பட்டை நாமம், துளசிமணி, பஞ்சகச்சம், எனும் பக்த வேடமணிந்து பச்சைமா மலைபோல மேனி என்று பாடுகிறானே, இவன் இன்று காலையில்தான் கள்ளக் கையொப்பமிட்டான், இங்கே கசிந்துருகிக் கோரிக்கொள்கிறான். ஆஹா! இந்தக் கள்ளி, கணவனை ஏய்க்காத நாளே கிடையாது, இங்கே எவ்வளவு சுத்தம், என்ன பக்தி! என்று தன் எதிரே வருவோரின் இயல்புகளைக் கண்டு, இப்படிப்பட்டவர்கள் சர்வமும் தெரிந்தவர் என்றும் என்னைத் துதிக்கின்றனர். ஆனால், தாங்கள் செய்யும் தீய காரியம் எனக்குத் தெரியாதென்றும் கருதிக்கொண்டு, பூஜித்து என்னை ஏய்க்கப் பார்க்கின்றனர். என்ன துணிவய்யா இந்தப் பக்தர்களுக்கு என்று ஆச்சரியப்பட்டுத் திகைத்து நிற்கிறார்.
பஞ்சை, பகலிலும் மாலையிலும், கோயிலை வலம் வருவதும் கும்பிடுவதும், உரத்த குரலிலே, பஜனை பாடுவதுமாக இருந்து வந்தான்; ஆண்டவனுக்கு என் சத்தம் எட்டாமலா போகும் என்று எண்ணினான். ஒவ்வோரிரவும், சாவடியிலே, பஞ்சையைக் கேலி செய்யாத ஆண்டி கிடையாது; அவன் அலுத்தும் போனான். கடைசியில் ஓர் பயங்கரமான முடிவுக்கு வந்தான். அதை அவன் கூறினபோது அந்த ஆண்டிகள் கைதட்டிக் கேலிசெய்தனர். அவன், மிக உறுதியுடன் இருப்பதை அவர்கள் அறியவில்லை.
நம்மைப்போன்ற மனிதப் பிறவியைத் தேவா என்று
39