வை.மு.கோ. 103-வது நாவல்
106
இதோ பாவி யாரோ தெரியாது, இவன்தான் பாமாவை மணந்து, சகல சொத்துக்களையும் அடையக் காத்திருந்தானாம்; பாமாவை நான் மணந்து கொண்டு, ஜோடியாய் வந்ததைக் கண்டதும், இவனே பாமாவை சடக்கென்று கொலை செய்து விட்டதோடு, என்னையும் கொலை செய்யப் பார்த்தான். துரைக் கண்ணனையும் நன்றாக அடித்துத் தள்ளிக் கொல்ல முயன்ற சமயம், நான் அவனைத் தடுக்க ப்ரம்ம ப்ரயத்தனம் செய்தும் வீணாகி, எனக்கே உதை விழுந்து விட்டது. தனக்கு சொத்தும், பெண்ணும் கிடைக்காத ஆத்திரத்தினால் இப்படி செய்யத் துணிந்தான்…”
என்று சொல்வதைக் கேட்ட ஸ்ரீதரன் நடுநடுங்கிப் போய்… “ஸார்… இவை எல்லாம் சுத்த பொய்! முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போன்றிருக்கிறது! துரைக் கண்ணனையே கேட்டால், சகலமும் தெரியும்; அவர் எழுதிய கடிதத்தைக் கூட இந்த மனிதன் அபகரித்துக் கொண்டான். வக்கீலைக் கேளுங்கள், சகலமும் தெரியும்… அவருக்குத் தெளிவு வருவதற்காக, நான் இப்போது ஊசி குத்தியிருக்கிறேன்…” என்று சொல்லும் போது… துரைக் கண்ணன் ஆத்திரத்துடன், “சண்டாளா! கொலை பாதகா! என் குடும்பத்தையே நாசம் செய்த காதகா! எங்கள் இருவரின் உயிரையும் பிரித்த பிறகாவது, உனக்கு புத்தி வருமா! த்ரோகி… பாமா… இதற்காகவா உன்னை இத்தனை செல்லமாக வளர்த்தேன். த்யாகத் தீயில் குதித்தேன்…ஹா… கடவுளே…” என்று தன் போக்காகக் கத்திய போது, சுந்தரம் துரைக் கண்ணனின் முகத்தருகில் சென்று… “மாமா மாமா… இதோ பாருங்கள். நான் உங்கள் ப்ரிய சுந்தரன். இதென்ன அக்ரமம்… எனக்கொன்றுமே விளங்கவில்லையே…” என்றான். துரைக்கண்ணன் அரைகுறை பார்வையில் அவனைப் பார்த்து… “சுந்தரம்..விளங்கவில்லையா… விளங்காது… இதோ… இதோ…… இவர்தான்… இவர்தான்…” என்று ஸ்ரீதரனைக் காட்டி இவரைக் கேட்டால் சகலமும் விளங்கும் என்று சொல்ல வந்தவருக்கு அதற்குள் அபா-