213
சாந்தியின் சிகரம்
என்று சொல்லும் போது, டாக்டரின் இதயம் கனவேகமாக அடித்துக் கொண்டது. எங்கே உண்மை, எந்த விதமாகவாவது வெளியாகி விடுமோ என்கிற பயத்தினால், தலை சுற்றியது. மெல்ல சமாளித்துக் கொண்டு… “உம்! அப்புறம் பாத்தியா இல்லையா! சீக்கிரம் சொல்லு” என்று தானே சமாதானத்துடன் கேட்டான்.
“உம், பார்த்தேன். அவன் சினேகிதர்களுடன் உல்லாஸமாய் செல்கையில் பார்த்து விட்டு, உடனே மனத்தை முறித்துக் கொண்டு சென்றவன்தான், மறுபடி ஒருவர் கண்ணிலும் படாமல் இருப்பதற்கு எந்த இடம் சரியானது என்று யோசித்தேன். சிறைச்சாலைதான் சரியானது என்று தீர்மானமாய்த் தோன்றி, இரும்புப் பிடியாக என்னை மாற்றி விட்டது. என்னை அக்கினி சாக்ஷியாய் மணந்து, அடிமை போல் பக்தி கொண்டு வாழ்ந்த க்ருகலட்ச்மியின் இதயத்தையும், எதிர்கால வாழ்வையும் முறியடித்த பாவிக்கு இதுதான் சரியான சிக்ஷை; சரியான ப்ராயச்சித்தம், என்று தோன்றியது; இதற்கும் சரியான சமயம் வர வேண்டாமா!
ஒரு ஏழைச் சிறுவன், பாவம்! தன்னுடைய தாயாருக்கு ஆபத்தான நிலைமை உண்டாகி விட்டதால், கையில் காலணா காசு கூட கிடைக்காமல் தவிக்கும் சமயம், அவன் வேலை செய்யும் எஜமானன் வீட்டிலேயே, அவன் துணிந்து 500 ரூபாயைத் திருடிக் கொண்டு, சுவரேறி குதித்தான். இவன் குதித்த இடத்தில், ஒரு ரிக்ஷாக்காரன் சீக்கினால் படுத்திருந்தான்: அவன் மீது குதித்து விட்டான். கையிலிருந்த சில நோட்டுகளும் சிதறி விட்டது. அதே சமயம் ரிக்ஷாக்காரன் கூகூ-