உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 அமெரிக்கப் பத்திரிகைச் செயின்களுள் குறிப்பிடத்தக்கவை ஹெர்ஸ்ட் குரூப், ஸ்கிரிப்ஸ்-ஹோவார்ட் குரூப், மக் கார்மக் குரூப், ஹென்றி லுயூஸ் ஆகியவை. இந்தியாவில் பிர்லா டால்மியா, ராமநாத், கோயன்கா போன்ற முதலாளிகள் முறையில் பத்திரிகைகள் நடத்துகின்றனர். நம் நாட்டில் இந்தியன் எக்ஸ்பிரஸ் முதலிய பல இதழ்களும், தினத்தந்தி முதலிய சில இதழ்களும் ஒரே முதலாளியால் பல நகரங்களிலிருந்து வெளியிடப்படுவதையும் ஈண்டுக் குறிப்பிடலாம். நல்லுறவை வளர்க்கும் கருவி வெளிநாட்டு மாணவரையும் தூதர்களையும் போலவே பத்திரிகைகளும் பல நாடுகளிடையே நல்லுறவை வளர்க்க வேண்டும் என்ற கருத்தோடு, அமெரிக்கப் பத்திரிகைகள் வெளிநாடுகளிலும் தனிப் பதிப்புக்களை வெளியிடுகின்றன. எடுத்துக்காட்டாக, ஹெரால்ட் ட்ரிபியூன் பத்திரிகைக்கு பாரிஸ் பதிப்பு ஒன்று உள்ளது. நார்த் சைனா டெய்லி நியூஸ், ஜப்பான் டைம்ஸ் அண்டு மெயில் ப்யூனஸ் ஏர்ஸ் ஹெரால்ட், பனாமா அமெரிக்கன், லாகூர் சி அண்டு எம் கெஜட் ஆகிய பத்திரிகைகள் எல்லாம் சில அமெரிக்கப் பத்திரிகைக் குழுவினராலேயே நடத்தப்படுகின்றன. மஞ்சள் பத்திரிகைகள் யினரின் பத்திரிகைகளின் விற்பனை கூடுவதற்காக, மக்களின் உணர்ச்சியைக் கிளப்பக்கூடிய கீழ்த்தரமான செய்திகளைச் சில பத்திரிகைகள் கொடுக்கின்றன; மக்களில் ஒரு பகுதி ஆதரவைப் பெறுவதற்காக ஹாவாய்த் துறை முகத் தொழிலாளரின் வேலை நிறுத்தத்தைப் பற்றிப் பல பக்கங்களில் செய்திகள் வெளியிட்ட அந்நகரப் பத்திரிகை கள், அங்கே நடந்த உலக தத்துவ சாஸ்திர மாநாட்டைப் பற்றிச் சில வரிகளே எழுதின. செய்திகளை மிகைம் படுத்திக் கூறுவதும் உண்டு. அதைப்பற்றி அமெரிக்கர் அவ்வளவு கவலைப்படுவதில்லை.