உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாகுபாடு 23 களாகப் பகுத்து, ஒவ்வொரு பருவத்திற்கும் பத்துப் பாட் டுக்கள் பாடப்படும். மூன்றாம் திங்கள், ஐந்தாம் திங்கள் என ஒற்றைத் திங்களையே அப்பருவங்களுக்குக் கொள்வர். ஏழாம் ஆண்டிற்கு மேலும் சில ஆண்டுகளைக் கொள்வது உண்டு. குழந்தை ஆணாயின் ஆண்பாற் பிள்ளைத்தமிழ் எனவும்,பெண்ணுயின் பெண்பாற் பிள்ளைத்தமிழ் எனவும் குறித்து அவற்றிடையே வேறுபாடும் கொள்வர். குழந்தையின் வளர்ச்சியையும் ஆடலையும் கற்பனை செய்து முதல்முதலில் பாடியவர் பெரியாழ்வார். வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிட கண்ணன் முற்றம் கலந்தள றாயிற்றே முதலிய பத்துப்பாட்டுக்கள் கண்ணன் பிறப்பைப் பற்றியன. சீதக் கடலுள் அமுதன்ன தேவகி கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும் பாதக் கமலங்கள் காணீரோ பவள வாயீர்வந்து காணீரோ. முதலிய இருபது பாட்டுக்கள் கண்ணனுடைய கால் விரல், துடை, உந்தி,வயிறு, மார்பு, தோள்கள்,கைகள்,கழுத்து, வாய், கண்கள், புருவங்கள், காதின் குழை,நெற்றி,முடி ஆகியவற்றின் அழகைக் காணுமாறு சுற்றுப்புறத்தாரை அழைப்பதாகக் கூறுவன.

  • முறைநருமூன்று ஆகிமூ வேநீறர் திங்கள் அறைக நிலம்பத்தும் ஆண்டு ஐந்தேழ். தோற்ற முதல்யாண்டு ஈரெட் டளவும் ஆற்றல் சான்ற ஆண்பாற் குரிய. காப்புமுதல் ஆகிய யாப்புவகை எல்லாம் பூப்புநிகழ் வளவும் பெண்பாற் குரிய

வச்சணந்திமாலை. இந்திர காளியார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/27&oldid=1681793" இலிருந்து மீள்விக்கப்பட்டது