உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாகுபாடு 29 இயற்றுவது என்றும், இத்தனை செய்யுளால் இயற்று வது என்றும், காலப் போக்கில் மரபுகள் ஏற்பட்டன. தொடக்கத்தில் அவ்வகை நூலை இயற்றியவர், எந்தச் செய்யுளால் எத்தனை செய்யுளால் அதனை இயற்றினார் எனக் கண்டு, அவரை அப்படியே பின்பற்றிப் பிற்காலத்து நூல்கள் அமைத்தனர். முதலில் இயற்றியவர் தமக்கு வாய்ப்பாக இருந்தவற்றைக் கையாண்டார்; காரணம் இல்லாமலே அவற்றைக் கையாண்டிருக்கலாம். பின் வந்த வர்கள் அவற்றை மரபாகக் கொண்டு விடாமல் போற்றி னர். செய்யுள் பலவற்றின் அடிவரையறை அமைத்த வகையிலும், இவ்வாறே முன்னோரைப் பின்பற்றி மரபுகள் ஏற்பட்டன.* பிறமொழிகளில் உள்ளவை பிறநாட்டு இலக்கியங்களில் அகம் புறம் என்ற பாகு பாடு இல்லை எனினும், வேறுவகைப் பாகுபாடுகள் உள்ளன. ஓர் உள்ளத்தின் உணர்ச்சி வெளியீடாக உள்ளது தன்னுணர்ச்சிப் பாட்டு (lyric) என்றும், சிறந்த தலைமக் களின் வாழ்க்கையை வரலாறு போல் விளக்குவது காவியம் (epic) என்றும், நீதியை விளக்குவதே நோக்கமாக உடை யது நீதிநூல் (didactic literature) என்றும் கூறப்படும். ள்ளல் பொருள் பற்றிய பாட்டு (satiric poetry), முல்லை நிலம் பற்றிய பாட்டு (pastoral poetry), மெய்யுணர்வு பற்றிய வாட்டு (reflective poetry), பக்தி பற்றிய பாட்டு (hymns) முதலியவை மேற்கு நாட்டு இலக்கியவகைகளாக விளங்கு கின்றன.

  • தொல்காப்பியம், செய்யுளியல், 158, பேராசிரியர் உரை.

"பதினெண் கீழ்க்கணக்கினுள்ளும் முத்தொள்ளாயிரத்துள்ளும் ஆறடியி னோறாமற் செய்யுள் செய்தார் பிற் சான்றோரு மெனக் கொள்க."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/33&oldid=1681798" இலிருந்து மீள்விக்கப்பட்டது