________________
பாகுபாடு 25 முத்தப் பருவம், நடந்து வருக வருக என அழைக்கப்படும் வருகைப் பருவம்,நிலவு காட்டி அழைக்கும் அம்புலிப் பரு வம், சிறுமியரின் சிற்றிலைக் காலால் சிதைக்கும் சிற்றிற் பருவம், சிறுபறை கொண்டு ஒலிக்கும் சிறுபறைப் பருவம், நடைவண்டி உருட்டும் சிறுதேர்ப் பருவம் ஆகிய பத்தும் ஆண்பாற்கு உரியவை. இறுதி மூன்று பருவங்கள், பெண் பாற்கு அமையும்போது, கழங்காடும் பருவமாகவும் (அல்லது சிற்றில் இழைத்து விளையாடும் பருவமாகவும்), அம்மானை ஆடும் பருவமாகவும், ஊசல் ஆடும் பருவமாக வும் கூறப்படும்.* பரணி போர்க்களத்தில் அது யானைகளைக் கொன்று குவித்துக் குருதி வெள்ளம் பெருகச் செய்த அரசனது வீரச் செயலைப் யுகழ்ந்து பாடுவதற்கென்று ஒரு நூல் அமைந்தது. பரணி எனப்படும். அந்த அரசன் எழுநூறு யானை களையோ ஆயிரம் யானைகளையோ கொன்ற பெருவீரனாக இருத்தல் வேண்டும் என்பர். கடவுள் வாழ்த்து, கடை திறக்குமாறு கூறுதல், பாலை நிலத்தின் கொடிய வெம்மை, காளி கோயிலின் சிறப்பு, காளியைப் பேய்கள் ஏத்துதல்,
- அவற்றுள்
பின்னைய மூன்றும் பேதையர்க்கு ஆகா ஆடும் கழங்கு அம் மானை ஊசல் பாடும் கவியால் பகுத்து வகுப்புடன் அகவல் விருத்தத் தால்கிளை அளவாம். ஏழ்தலைப் பெய்த நூறுடை இபமே அடுகளத் தட்டான் பாடுதல் கடனே. ஆனை ஆயிரம் அமரிடை வென்ற - பன்னிரு பாட்டியல், 145. மான வனுக்கு வகுப்பது பரணி. - இலக்கண விளக்கப் பாட்டியல், 78.