உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நாவல் 109 போல் அவ்வளவு கவர்ச்சியுடன் ஆட்கொள்வது அரிது என்றும், மற்றவற்றைவிட அது ஆற்றல் மிக்கது என் றும், அதற்காகச் செய்யப்படும் தியாகங்களே மிகப் பல என்றும் வின்செஸ்டர் கூறியுள்ளார்.*காதல் என்ற பெய ரால் வரும் காமுகர். கதைகளுக்கு இவ்வாறு நின்று நிலவும் ஆற்றல் இல்லை. வாழ்க்கை : இலக்கியம் நாகரிகம் வளர வளர, மனிதர் சிறு கூட்டமாக இருந்து வாழ்ந்த நிலையிலிருந்து பெரிய சமுதாயமாக வாழும் நிலைக்கு உயர்ந்துள்ளனர். வர வர சிறு நாடுகள் பலவும் ஒரு குடும் பத்தின் உறுப்புக்கள் போல் ஆகி, உலகமே ஒரு பெருஞ் சமுதாய அமைப்பாக உருக்கொள்கிறது. ஆனால் இலக்கிய உலகில் மாறான வளர்ச்சி உள்ளது. தனி மனிதரின் உணர்ச்சி அல்லது சிறு குழுவினரின் உணர்ச்சி அமைந்த பாட்டு (lyric) என்பதிலிருந்து காவி யம் நாடகம் என வளர்ந்து இலக்கிய வகைகள் அமைந்துள் அந் நிலையில் இருந்த இலக்கியம் இன்று மீண்டும் தனி மனிதரின் உணர்ச்சியை வெளிப்படுத்துதல் மிகுந்து வளர்ந்துவருகிறது. சமுதாயத்தின் உணர்ச்சிகளைப் புலப்படுத்திய காவியங்களும் நாடகங்களும் குறைந்து, ளன.

  • Probably nine-tenths of all fiction is built up around the passion of early love between the sexes. This is inevitable, and that for a variety of reasons. The passion of love between the sexes is the most universal and normal of all passions. No other is so sure to have the comprehension and sympathy of every reader. And no other passion, which can be exhibited in isolation as this can, influences so profoundly the course of individual life. It is more imperious than any other; men make more sacrifices for it.

-C.T. Winchester, Some Principles of Literary Criticism, p. 290

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/113&oldid=1681856" இலிருந்து மீள்விக்கப்பட்டது