உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

112 இலக்கிய மரபு கதை நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற பின்னணியான இடம் முதலியனவும் அமைத்தல் வேண்டும். அவற்றைப் பற்றிய விளக்கங்களும் ஓரளவு வேண்டும். கதையைச் சுவையற்ற தாக்கும் அளவிற்கு அந்தப் பின்னணி வருணனை விரி வாக அமைதல் கூடாது. வருணனை முடியும் வரைக்கும் கதை நிகழ்ச்சி தடைப்பட்டு நிற்பதால், கூடிய வரையில் சுருக்கமாகவே அமைதல் வேண்டும். நாவலில் கூறப்படும் நிகழ்ச்சிகளோ செய்திகளோ, கட்டடத்தின் தூண்கள் போல் கதைக்கு இன்றியமையா தனவாக இருத்தல் வேண்டும்: அந்த நிகழ்ச்சிகள் இல்லை யானால், கதை இவ்வாறு அமைந்திருக்காது என்று படிப் பவர் எண்ணுமாறு அமைய வேண்டும்; அந்தச் செய்திகள் தரப்படவில்லையானால், கதைமாந்தரைப் பற்றி இவ்வளவு தெளிவு ஏற்பட்டிருக்காது என்று எண்ணுமாறு அமைய வேண்டும். அவ்வாறு அமைந்தால்தான், நாவலைக் கற்பவர் சுவையோடு கற்க முடியும் ; கற்று முடிந்த பிறகும் நினைத்துப் பாராட்ட முடியும். அவ்வாறு, கட்டடத்திற்குத் தூண்கள் போல் அமையாமல், ஒட்டாத அலங்காரங்கள் போல் கதையில் புகுத்தப்படும் வருணனைகளோ கருத்துக்களோ சுவையாக அமைவதில்லை. அவை கற்பவரால் எளிதில் மறக்கப்படும் ; கதையின் போக்குக்கு இடையூறு என்றே அவை கருதப்பட்டுப் புறக்கணிக்கப்படும். அனுபவத்திற்கு எட்டல் மக்களைப் பற்றியும் நிகழ்ச்சிகளைப் பற்றியுமே நாவல் எடுத்துரைப்பதாகும். ஆயினும், நாம் வாழும் வாழ்க் கைக்குத் தொடர்பு இல்லாததாக, நம் விருப்பத்திற்கு உரியது அல்லாததாக இருந்தால் பயன் இல்லை. நம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/116&oldid=1681864" இலிருந்து மீள்விக்கப்பட்டது