உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மரபு 203 பாரதியாரின்கண்ணன்பாட்டும் குயிற்பாட்டும் காதல்பற்றிய கற்பனைகளுக்கு உயர்வும் புதுமையும் தந்துள்ளன. காதல் பாட்டுக்கள் அல்லாத புறப்பொருள் பற்றிய பாட்டுக்களி லும் வீரம் கொடை புகழ் முதலியன பற்றிய பாட்டுக்களி லும் - வாழ்வுக்கு ஏற்ற மாறுதல்கள் இடம் பெற்றுள்ளன.* நாடகத் துறையிலும் மாறுதல் பல நேர்ந்துள்ளன. ஐந்து அங்கங்களாகவே அமைக்கவேண்டும் என்ற பழைய மரபை இன்று ஐரோப்பிய நாடக ஆசிரியர்களும் போற்று வதில்லை. அங்கங்கள் என்று பகுக்காமலே நாடகம் எழுது வோர் உள்ளனர். இட ஒருமை கால ஒருமை என்பவற்றை யும் இன்று நாடக ஆசிரியர்கள் போற்றுவதில்லை. நாடகம் என்றால் மிக நல்லவன் ஒருவனைப் படைத்தல் போலவே, மிக்க கொடியவன் ஒருவனையும் (villain) படைத்துக் காட்ட வேண்டும் என்ற கட்டாயம் இன்று இல்லை.கொடி யவன் இல்லாமலே, வாழ்விலே இடையூறுகளும் துன்பங் களும் நேர்வதை உணர்ந்த ஆசிரியர்கள், அவ்வாறே நாட கங்களிலும் கற்பனை செய்து காட்டுகின்றனர். இலக்கியமும் வாழ்வும் வா ழ்வு நல்கிய விழுமிய உணர்ச்சியால் அமையும் இலக்கியமே சிறந்த கலைச்செல்வமாகும். பழைய நூல்களைப்

  • Because poetry is a living thing, it changes as often as any major change occurs in man, since it expresses his thoughts, visions, and emotions. As often as a social group changes, its poetry changes.

- Peter Westland, Contemporary Literature, p. 190. † But Shakespeare had no patience with these formal restrictions: the unities meant nothing to him. J. B. Wilson, English Literature, p. 65. The literature which really counts, as I have more than once insisted, is the literature which is made, not out of other literature, but of life; and for a living literature no models will suffice. -W.H.Hudson, An Introduction to the Study of Literature, p. 313.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/207&oldid=1681873" இலிருந்து மீள்விக்கப்பட்டது