உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய மரபு.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மரபு 199 பழங் காலத்தில் வெளி நாட்டுக்குச் சென்றவன் தேர் ஊர்ந்தும் காலால் நடந்தும் திரும்பிவர வேண்டும். ஆகவே பொழுது போவதற்குள் ஊர்க்குத் திரும்பும் வகையில் தன் பயணத்தை அமைத்துக்கொள்வான். அதனால் அவனு டைய வரவை அவன்மனைவி காலையில் எதிர்பார்க்காமல் நண்பகலிலும் எதிர்பார்க்காமல் மாலையில் எதிர்பார்த்துக் காத்திருந்தாள். இன்று வெளி நாட்டுக்குச் சென்ற காதலன் பெரும்பாலும் புகைவண்டி வாயிலாகத் திரும்புவதால் அது தனி ஒருவனுடைய திட்டப்படி அமையாமல் வண்டிகளின் கால அட்டவணைப்படி அமைகின்றது. அன்றியும் பழங் காலத்தில் காதலன் தான் திரும்பி வருவதைக் காதலிக்கு அறிவிக்கத் தபாலும் தந்தியும் இல்லை. ஆகையால் காதலி பல நாளும் எதிர்பார்த்து ஏமாந்து வருந்து வதும் ஒருநாள் எதிர்பார்த்தவாறு வரக் கண்டு மகிழ் வதும் அன்றைய வாழ்வில் இருந்தன. மாலையில் வரவு எதிர்நோக்குதல் கற்பனைக்கு உரிய சிறந்த பகுதியாகவும் விளங்கியது. இன்று தபாலும் தந்தியும் அத்தகைய சிறப்பு இல்லாமல் செய்துவிட்டன. காதலன் வரும் நாளும் தெரி யும், வரும் நேரமும் தெரியும் என்ற வகையில் வாழ்க்கை இன்று அமைந்துள்ளது. அதனால் இன்று கலைஞர்கள் அமைக்கும் கற்பனையும் மாறிவிட்டது. ஆகவே கலையின் கற்பனை அறிவை அடியோடு துறந்து அமைய முடியாது என்பது தெளிவாகின்றது. சிறப்பாக, இலக்கியக்கலை எவ்வளவு உணர்ச்சி மிக்கதாய் இருந்தாலும் அறிவோடுஒட்டியகற்பனையாலேயே சிறந்து விளங்கமுடியும்.* The tendency to idealism is often of great service to art, also, when idealism is degenerating into conventionalism. For it is often perhaps that the original and powerful masters who worked from life, came to be regarded as models to be slavishly imitated. -C. T. Winchester, Some Principles of Literary Criticism, p. 175.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/203&oldid=1681888" இலிருந்து மீள்விக்கப்பட்டது