உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடு ஆப்பிரிக்கா.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அமைப்பு மலாவி வடக்கேயிருந்து தெற்கே 520 மைல் நீள முடையது. ஆனால் இதன் அகலம் சில இடங்களில் 50 மைல் அளவாகவும் சில இடங்களில் 100 மைல் அள வாகவும் இருக்கிறது. ஏரிகளும் மலைகளும் மிகுந்து அழகான காட்சிகளை இந்த நாடு கொண்டிருக்கிறது. இந்த இயல்புகளில் இது கேரளத்தைப் போன்றிருக் கிறது. மேலும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. மலாவியிலும் கிறித்தவ மிசினரிமார் பெருந் தொகை யாக உள்ளனர். மக்கள் வேலை தேடி, வெளி நாடு களுக்கு, ஜாம்பியாவின் தாமிரச் சுரங்கங்கள் ரொடீசி யாவின் புகையிலை நிறுவனங்கள் தென் ஆப்பிரிக்கத் தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு மலாவியர்கள் செல் லுகிறார்கள். இந்த நாட்டின் பெரிய ஏரி நியாசா ஏரி என்பது. இதன் பெயராலேயே இந்நாடு வழங்கப் பெற்றது. இந்த ஏரியின் நீளம் 360 மைல். இந்த ஏரியின் பரப்பு, இந்த நாட்டின் பரப்பில் ஐந்தில் ஒரு பங்கு. இது, தமிழ் நாட்டின் மிகப் பெரிய ஏரியான வீராணம் ஏரியைப் போல 60 மடங்கு பெரிது. வடக்கே தங்கனிகா, கிழக்கே மொசாம்பிக்கே, தெற்கே தென் ரொடீசியாவும் மேற்கே வட ரொடீசி யாவும் இந்த நாட்டின் எல்லை நாடுகளாக உள்ளன. புவியியல் வளம் இந்த நாட்டில் சிறு சிறு சுரங்கங்கள் உள்ளன. ஆனால் எந்தப் புவியியல் பொருளும் உற்பத்தி செய்யப்படவில்லை.