41 வசந்தி : பாண்டியன் மகளை பாணிக்கிரகணம் செய்தது பற்றித்தான் ஊர் உன் அண்ணனைப் பார்த்து சிரிக் கிறது. தகப்பனைக் கொன்றவனுக்கு தாரமாய் வாய்த் ததைப்பற்றித்தான் உலகமே உன் அண்ணியைப் பார்த்து சிரிக்கிறது... [பல்லைக் கடித்து ] சிரிக்கிறார்களாம் சிரிப்பு.... எல்லாம் சீரழித்துவிடு கிறேன்...வாடா நீ!.. வசந்தன்: அதெல்லாம் உன்னால் முடியாதம்மா! .உன்னை புழுமாதிரி தவிக்கவிடப் போவுது அண்ணன்- ஜாக்கி ரதை! இப்பத்தான் அண்ணிகிட்ட சொன்னுது. ஏன் அண்ணி! [கேலியாக] வசந்தி : உம் வீராதி வீரர்களாலும் முடியாத காரியம் இந்த வேசி மசுனால் தானா முடியப்போகிறது. மனோகரன் : ஆ ஆ! என்ன சொன்னுய்? (கட்டாரியை உருவுகிறான்) நஞ்சு கக்கிய அந்த நாவைத் துண்டாடுகிறேன் பார்!... [அதைத் தடுத்துப் பிடித்து] அரசன்: மனேகரா! விடு மனோகரன்: முடியாது நீர் உம் மனைவியின் மானத்தைக் காப்பாற்றாவிட்டாலும் நான் என் தாயாரின் மானத் தைக் காப்பாற்றியே தீருவேன். அரசன்: சொல்வதைக் கேள்... மனோகரன்: முடியாது....உமுக்கு அவளைக் காப்பாற்றும் சத்யசீலர்: மனோகரா! வல்லமையிருந்தால் விஜயா: அத்தான்! அத்தைக்குச் சொன்ன வாக்குறுதி மனோகரன்: ...... [விஜயாவை அடித்துவிடுகிறான்) மனோகான் : அம்மா!... (குழப்பத்துடன் போய்விடுகிறான்.)
பக்கம்:மனோகரா மு. கருணாநிதி.pdf/42
Appearance