உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




17

வகை

வகைப்படுத்தும் முறை

தொடர்புடைய பலவற்றை இணைத்து ஆய்வு செய்யும் போது அவற்றின் கூறுகளை நன்கு அறிந்து வகைப்பாடு செய் தால் சில அரிய உண்மைகளை மிகவும் எளிதாக அறிய வழி பிறக் கும். ஒற்றுமைக் கூறுகளைக் கொண்டு வகையிடுவது பொருத்த மாக அமையும். ஆயினும் வேற்றுமைகள் இருக்கவே செய்யும். வேற்றுமை இல்லாதவற்றை வகைப்பாடு செய்ய வேண்டிய தேவையும் இல்லை. வகையிடும் போது சில பொருள்கள் இரண்டு வகைக்குள் பொருந்தும் சிக்கலும் ஏற்படலாம். அத் பிரிவில் அப் தகைய நிலையில் அதிகக் கூறுகள் இணையும்

பொருளை இணைத்துச் சிக்கலைத் தவிர்க்க வேண்டும். ஒரே தன்மையிலுள்ள கூறுகளைக் 'கொண்டே வகையிடுவது முறை யாகும். ஒரு வகைப்பாட்டில் சிலவற்றின் பொருள் கூறுகளையும் சிலவற்றின் செயல் கூறுகளையும் கலந்த நிலையில் வகைப் படுத்துவது தவறாகும். சில சமயம் வகையிடும் பொருள்களில் சில, எந்தப் பிரிவுக்குள்ளும் அடங்காது தனிப்படுவதும் உண்டு. கூடியவரையிலும் அவற்றுள் பொருத்தம் காண முயல வேண் டும். இல்லாவிட்டால் தனியாகக் குறிப்பிட்டுக் காட்டுவதே முறையாகப் படுகிறது.

நாட்டுப்புறக் கலைகளின்

கல்யாணம்

பாகுபாடு

பகுத்

பாடல்,

சுவர்கள்

பெரு நூற்கள் கலைகளை அறுபத்தினாலாகப் கலைகளாக நாட்டுப்புற இயல்புடைய துள்ளன. (இசை) ஆடல் (நடனம்) கூத்து (நாடகம்) ஆகியவற்றை முக்கிய மாகக் கருதலாம். நாட்டுப்புறத்தில் ஓவியம், சிற்பம், கட்டிடம் போன்ற கலைகள் இல்லாமல் இல்லை. கோயில் வீட்டுச்சுவர்கள் ஆகியவற்றில் அழகான படங்கள் வரைந்து வைத்துள்ளனர். அதில் இதிகாசப் புராணச் சித்திரங்கள் இடம் பெற்றிருக்கும்.. சீதை திரௌபதி சுயம்வரம், இராமர் முடிசூடல், வாலி வதை, நச்சுப்பொய்கைக் காட்சி, கண்ணன் தாமரைப் பொய்கையில் குளிக்கும் பெண்களின் துயில் கவரும் காட்சி, வேடன் புலியைச் சுடுதல் போன்ற காட்சிகள் ஓவியங்களாகப் பல கோயில்களில் தீட்டப்பெற்றிருக்கும் வீடுகளில் சமூக நிகழ்ச்சிகள், ஊரில் நடப்பவை முதலியன ஓவியங்களாக வரையப் பெற்றிருக்கும். இவை நாட்டுப்புற மக்களின் ஓவியக்கலைத் திறனுக்குச் சான்றுகளாக அமையும்.