உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




65.

பெற்றோர் தங்கள் கையுள்ள கம்புகளைத் தட்டி ஆர்பரித் திருப்பார்கள். அது வெற்றி விழாவாக உருவாகியிருக்கலாம். நாளாக நாளாக அது சீர்திருத்தி ஒரு கலையாக வளர்ந்திருக்கும்.

போருக்கு வேண்டிய பயிற்சியைப் பெறும் போது பலவித மாக அடித்து ஒழுங்கு முறைகளைச் சீராக்கி இருப்பான். ஒருவன் அடித்து அடுத்தவன் தடுத்துப் பழகியிருப்பர். அவ்வாறு அடிப்பதில் ஒருவித கலைநயத்தை மனிதன் உணர்ந்து சிலம்பாட்டக் கலையை உருவாக்கி வளர்த்திருக்கலாம். போராடும் உணர்ச்சியில் தோன்றி போராடும் முறையில் வளர்த்து ஒழுங்கு முறைகளால் சீர்ப்பட்டு கலைத்தன்மைகளில் வளம்பெற்று வளர்ந்த கலையாகச் சிலம்பாட்டம் விளங்குகிறது.

இன்றைய நிலையில் சிலம்பக்கலை மிகவும் சிறப்பாக வளர்ந்துள்ளது. உடற்பயிற்சி, தற்காப்பு, போராட்டம் ஆகிய முக்கிய நோக்கங்களைக் கொண்டு விளங்குகிறது. 'நடசாரி' என்று கூறப்படும் ஓலைப் பட்டயச் செய்தியில் சிலம்பாட்டத்தின் தோற்றம் ஒரு புராணக் கதையாகக் கூறப் பெற்றுள்ளது.

பரமசிவனின் முன்பு பீமன் பலவிதமான அடவு முறைகளுடன் (அடிமுறைகள்) ஆடினானாம். அதைப் பாராட்டுகிறார். ஆகையினால் மற்றவர்களும் பின்பற்றிச் சிலம்பக் கலையை வளர்த்துள்ளனர். தேவதைகளுக்கு உரியதாகவும் இந்தக் கலை கூறப்படுகிறது. தனிமனிதன் தன் கலைத் திறனை விளக்கவும் இக்கலையில் இடமுள்ளது. கம்பை வேகமாகச் சுழற்றுவதில் கலை நயத்தைக் காட்டிப் பிறரைக் கவர்ந்துவிடுகிறான். வேகம், திடீரென சுழற்சி மாற்றல், முன்பின் திரும்பி ஆடல் ஆகியவற்றில் கவர்ச்சியும் வியப்பும் உள்ளன.

14.

சிலம்பாட்டத்தில் பலவிதமான சுவடுமுறைகள் கையாளப் படுகின்றன. தட்டு வர்மச்சுவடு அவற்றில் ஒன்று, இது 64 ஆசனங்களை உடையது. இது உடலிலுள்ள வர்ம நாடியிடங் களை நோக்கி அடிப்பதாகும். இன்னும் 64 ஆசனங்களை உடைய அங்கச் சுவடு முறைகள் உள்ளன. இதனை இப்பொழுது யாரும் கையாண்டு ஆடுவதற்கு மிகுந்த நுட்பத் திறன் வேண்டும். ஒன்றைச் சுவடு

விளையாடுவதில்லை,

(14) சிலம்புக் கலையின் சுவடு முறைகளை விளக்கிக் கூறிய ஆசான் திரு எல். சுகுமாரன், இளந்தோட்டம் விளை, கிள்ளியூர், குமரி மாவட்டம்.

BIT-5