155
இருக்கலாம். அவன் வீதியுலா வருவதில் குறவஞ்சி நாடகம் ஒரு நல்ல சூழ்நிலையைக் கோலாகலமாக உருவாக்கித் தொடங்கப்படும். இனிய காட்சிகளைச் சுவையான பாடல்கள் வாயிலாக விளக்கி எளிய ஆடல்களாக மக்கள் முன் நடித்துக் காட்டப்படுவது குறவஞ்சி நாடகம்.
17,18,19 ஆம் நூற்றாண்டுகளில் குறவஞ்சி நாடகம் தமிழ் நாட்டில் மக்களால் மிகவும் விரும்பிக் காணப்பட்டுள்ளது. சங்க நூற்களில் குறமகளிரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. குறுந்தொகையில் 'வெண்கடைச் சிறுகடை அசுவன் மகளிர் (298) என்றும், அகநானூற்றில் 'நுண்கோல் அகவுனர்' (152, 208) என்றும் அவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம். குறி சொல்லுவதற்காக அவர்கள் பயன்படுத்தும் சிறுகோலை அவர்களுக்கு உரிய குறியீட்டுக் கருவியாகப் புலவர் கருதி யிருப்பதிலிருந்து குறி சொல்வதில்தான் அவர்களுடைய தனிச் சிறப்பு அமைந்திருப்பதை அறியலாம்.
குறம், குறத்திப்பாட்டு
ஆகியவற்றைக் குறவஞ்சி நாடகத்தின் முன்னோடிகளாகக் கருதலாம். குறம் ஒரு நெடும் பாடலாக இருக்கும். அதில் முடுகுக் கவிகள் இடம் பெற்றுள்ளன ஒருவர் இசையுடன் பாடும் நிலையில் உள்ளது குறிசொல்வது. ஒன்றே குறத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளது.
'அல்லி
மாறு
புகழேந்திப் புலவர் பாடியதாகக் கூறப்படும் அரசாணி அருச்சுனனுக்காக மகா சாமார்த்தியமுள்ள வேஷம் கொண்டாடிய வித்துவான் குறம், மின்னொளியால் குறம்' ஆகிய இரண்டும் இன்று காணக்கிடைக்கும் நல்ல குறங்கள். அவற்றிற்கு மக்களிடம் மதிப்பு இருந்தமையால் பல பதுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளனர். அவை படிப்பதற்கு மாத்திரமே தகுதியுடையதாக உள்ளன. நடிப்பதற்கு உகந்தவை அல்ல. குறவஞ்சி நாடகம் குறத்தின் வளர்ச்சியாக நடிப்பதற்கு நல்ல வாய்ப்பான அமைப்புடன் உருவாகியுள்ளது.
குறவஞ்சி நாடகம் ஏனைய நூல்களைப் போன்று வாழ்த்து வணக்கத்துடன் தொடங்கப்படுகிறது. இதுவே பெரும்பாலோர் இடைக்காலத்தில் நூல் தொடங்கும் மரபு முறையாகும். பின் தலைவன் உலா வருகிறான். பலர் அதைக்கண்டு களிக்கின்றனர். ஏழு பருவத்து. மங்கையரும் பார்க்கின்றனர். பருவத்துக்கு ஏற்றவாறு உணர்ச்சி பெறுவது இயற்கைக்குப் பொருந்தும் விளக்கமாக இருப்பினும் சமூக வழக்கக் கட்டுப்பாடுகளை மீறும்
1