நாட்டுப்புறக் கலைச் சிறப்புகள்
இயல்பான தன்மைகள்
உணர்ச்சி பிழிவின் உண்மை வடிவாய் உருவாகி இனக்கமாய் மக்களைக் கவரும் தன்மையுடன் விளக்குவது நாட்டுப்புறக் கலைகளின் இயல்பான போக்காக உள்ளது. எளிதில் விளக்கவும் இயல்பாகச் சுவைக்கவும் மக்களால் முடியும் என்ற நிலையில் அவை சிறப்பாக அமைந்துள்ளன. ஆறுதல் அளித்துத் தேறுதல் புகலும் கலைச் சாதனங்களாக விளங்குகின்றன. கலைஞனும் சுவைஞனும் இணைந்து இன்பம் பெற வழிவகுக்கும் தன்மை நாட்டுப்புறக் கலைகளில் காணப்படுகிறது. இயற்கையாகத் தோன்றிச் செயற்கையாக வளர்ந்துள்ளன. உலகியலுக்கு அப்பாற்பட்டவற்றையும் உருவாக்கிக் காட்ட வல்லவை. துன்பம் துடைத்து இன்பமளிக்கும் இயல்புகள் நிறைந்தவை. கட்டுக்கடங்காத கலையுணர்வுடன் விதிமுறைகள் இல்லாமல் இயல்பாகத் தோன்றியுள்ளவை. நிறையுணர்வைக் கொட்டிக் கவிழ்ப்பவை. மனிதவுணர்வில் இறையின் தன்மையைக் காட்ட முயல்பவை.
கலை
பல்வேறு வடிவில் தோன்றி மனிதனின் மனத்தில் எழும் உணர்ச்சிகளைக் குறைவில்லாது காட்டும் கலைப் படைப்பு களாக நாட்டுப்புறக் கலைகள் விளங்குகின்றன. சொல்லால் வடித்துக் காட்டவியலாதவற்றையும் வடிவங்களில் உருவாக்கி விளக்க முயலும் தன்மையுடையவை. அருவமான கருத்துக்களை எளிதில் அறியும் தரமாக உருவங் கொடுத்துக் காட்டும் முறையமைப்புகளாகப் பல கலைகள் விளங்குகின்றன. உள்ளத்தில் உவகையைக் கிளர்ந்து எழச் செய்து துன்ப நாளங் தூங்க வைத்து உலக வாழவில் மனிதனுக்கு ஒருவிதமான பற்றையும் பிடிப்பையும் ஏற்படச் செய்யும் ஆற்றல் இத்தகைய கலைகளுக்கு இயல்பாக இருக்கிறது. மக்களுக்கு வாழ்வில் நம்பிக்கையும் நாட்டமும் ஏற்பட உதவுகின்றன.
தொன்று தொட்டே வழக்கத்தில் உள்ள நாட்டுப்புறக் கலைகள் மரபுமுறைகளைக் காத்து மனிதனின் வளர்ச்சிப் படிகளை உணர்த்தும் தன்மையுடன் காணப்படுகின்றன. வழி