பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

என்னினத்தில் பலவகைப் பூக்களுக்குப் பலவகை உருவ அமைப்பு உள. அவ்வமைப்புகள் சிறிது சிறிது வேறு பட்டவை; படிப்படியாக அமைந்தவை. அவ்வவ் வமைப்புக்கேற்ற சொற்களைக் கொண்டவை. அரும்பின் இதழ்கள் சற்றுத் தழைத்துக் கலித்தால் அது கலிகை. உள்ளிடம் சால்பை அடைந்தால் சாலகம். கொட்டையின் மூலம் பிடித்தால் பொகுட்டு. சூலகம் முனைப்பது கன்னிகை. நீர்க் குமிழிபோல் அரைக்கோள உரு அமைந்தது மொக்குள். அடி பருத்து உயர்ந்து மேற்பகுதி மொட்டையாகத் தோன்றுவது மொட்டு. இதழ்கள் நெகிழ்ந்து முனைக் குவிவோடு தோன்றுவது முகிழ், அஃதே முகிளம், இவ்வாறு, பல நிலைகனில் மிளிரும் எனது முகைப் பருவம் மணத்திற்கு உரித்தான பருவமாகும். இம் முகிழ்’ என்னும் சொல்லி லிருந்தே இன்றைய வழக்காகிய முகூர்த்தம்’ என்னும் சொல் உரு வாயிற்று. இப்பருவம் மனம்-திருமணம் முகிழ்க்கும் பருவம். இது கொண்டு திருமண நாள் முகிழ்த்தநாள்' எனப்பட்டது.முகிழ்த்தம் முழுத்தமாயிற்று. வத்தவ நாளையென்றே மறையவர் முழுத்தம் இட்டார்’ என்கிறது. உதயணகுமார காவியம் (107) இம்முழுத்தமே காலப்போக்கில் முகூர்த்தம் ஆகி வடசொல் போன்றமைந் தது. எனது பருவங்களில் யாவும் மனம் உள்ளனவாயினும், முகைப் பருவமே மணத்திற்குத் திறப்பு விழா செய்வது. இத்திறப்பு விழாவைக் கண்டு உவந்த குறுங்கீரனார் என்னும் புலவர், “............................... கொடி முல்லை முகை தலை திறந்த நாற்றம்' 0 -என்றார். இப்பருவத்தில்தான் மணம் என்னும் எனது தன்மை முழு நிறைவு பெற்றுக் கமழும். காற்றும் படாததால் இயற்கை கலையாத மணம் நிற்கும். இது மிகச் சிறந்த மணமாகும். ஆதலால், இதனை மாந்தர் நுகர விரும்புவர். இயற்கையில் 'போது ஆகி மலர்வதற்குள் செயற்கையில் திறந்து நுகர்ந்துவிட விரும்புவர். இம்மணம், 'திறந்து மோந்தன்ன சிறந்து கமழ் நாற்றம்'11 -எனப்பட்டது. 10: குறு:842; 1, 2: 11 மது. கா: 567