பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183


"ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்” குறி. Lłff ; 69) 'தண்கயக் குவளை, குறிஞ்சி வெட்சி’ (குறி, பா : 63) 'வாழை, வள்ளி, நீள்நறு நெய்தல்' (குறி. பா:79) இவ்வாறு ஆம்பல், குவளை நெய்தல் என மூன்றைக் குறித்தவர் மேலும், 'காஞ்சி, மணிக்குலை கட்கமழ் நெய்தல்' என நீண்ட அடைமொழியுடன் மீண்டும் நெய்தலைக் குறித் துள்ளார். இது சொன்னதையே சொன்னதாகாது. குறிஞ்சிப்பாட்டு, பிரகத்தன் என்னும் ஆரிய அரசனுக்குத் தமிழின் பாங்கை அறிவிப்பற்காகக் கபிலரால் எழுதப்பட்டது என்பது வழக்கு. அவ்வாறு பிறமொழி அரசனுக்கு அறிவிப்பவர் வீனுக்கு ஒன்றை அடுக்கிச் சொல்லிடமாட்டார். அவ்வாறானால் இரண்டு நெய்தல்களின் விவரம் யாது? நெய்தல் நிலமான கடற்கரைக் கழியில் நெய்தலுடன் அதன் இனத்தைச் சேர்ந்த மற்றொரு பூ உண்டு. " ... . . . . ... ...கழியே, சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப எறி திரை ஒதம் தரல் ஆனாதே'2 -என்னும் அகநானுாற்றுப்பாடல் அதனைக் 'காவி’ என்று காட்டுகின்றது பிற இலக்கியங்களிலும் இக்கருத்து உண்டு. இக் காவியையே ‘கருங்குவளை’ என்று பிற்காலத்தோர் எழுதினர். ஆனால், காவி என்பது இதுவரை காணப்பட்ட, ஆம்பல் குலத்தில் மூன்று வகைப் பூக்களிலும் வேறுபட்ட பூ. ஆனால், ஆப்பல் குடும்பத்தைச் சேர்ந்ததே. இலக்கியங்கள் இதற்குக் கொடுக்கும். அடைமொழி கழி’ என்பது. அஃதாவது காவி கடற்கரைப் பகுதி யாகிய கழியில் மட்டுமே பூக்கின்ற நெய்தல் நிலப் பூ மற்றொரு நெய்தல் நிலப் பூவாகிய நெய்தல் மருத நிலத்துக் குளத்திலும் பூக்கும்; கழியிலும் பூக்கும். இவ்வகையில் அறிமுகம் பெறும் காவியும் சேர, 1 5.5% um : 84 2 அக: 850 1.8